ஃபிளிப்கார்ட் தீபாவளி சேல் – ஐபோன் 17, சாம்சங் S25 FE போன்களுக்கு அதிரடி தள்ளுபடி
Flipkart Big Bang Diwali Sale 2026 : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இ காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட், பிக் பேங் தீபாவளி சேல் 2026 என்ற பெயரில் புதிய விற்பனையை அறிவித்துள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களைத் தள்ளுபடி விலையில் வாங்கலாம். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இ காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட், பிக் பேங் தீபாவளி சேல் 2026 (Flipkart Big Bang Diwali Sale 2026) என்ற பெயரில் புதிய விற்பனையை அறிவித்துள்ளது. அதன் படி அக்டோபர் 28, 2026 தொடங்கும் இந்த விற்பனையில், ஐபோன் 17, சாம்சங், விவோ, ஒப்போ, போக்கோ, ரியல்மி, மோட்டோரோலா உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களைத் தள்ளுபடி விலையில் வாங்கலாம். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஃபிளிப்கார்ட் தீபாவளி சேல்
இந்த விற்பனைக்காகப் பிரத்யேக வெப்சைட்டும் ஃபிளிப்கார்ட் தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள், வாஷிங்மெஷின்,ஃபிரிட்ஜ், ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட பொருள்களுக்கும் சலுகைகள் கிடைக்கும். குறிப்பாக எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் வாங்கும் பொருள்களுக்கு உடனடியாக 10 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கும். கார்டு மூலமான இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கும் இந்த சலுகை பொருந்தும். மேலும் ரூ.2 லட்சம் வரையிலான கடன் வசதியும், வட்டியில்லாத இஎம்ஐ வசதியும் வழங்கப்படும். ஃபிளிப்கார்ட் பே லேட்டர் சேவையைப் பயன்படுத்துவோருக்கு ரூ.1,000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
இதையும் படிக்க : தேனி சிறையில் இருந்து எஸ்-ஆன 17 கைதிகள்.. ட்ரோன் மூலம் தூக்கிய தனிப்படை.. காட்டுப்பகுதியில் மேலும் 8 கைதிகள் கைது!
டிக்டாக் டீல்ஸ் என்ற பெயரில், ஒவ்வொரு மணி நேரமும் புதிய சலுகைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதுதவிர, நாளின் குறிப்பிட்ட நேரங்களில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும். அதன் படி மாலை 5 முதல் இரவு 7 மண வரை பண்டிகைக்கால அதிக விற்பனைப் பொருட்களும், இரவு 7 மணி 8 மணி வரை பிரைஸ் கிராஷ் பொருட்கள் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பிக் பேங் ஹவர்ஸ் மற்றும் இரவு 8 மண முதல் 10 மணி வரை ‘ஃபயர்கிராக்கர் டீல்ஸ் விற்பனையும் தொடங்கப்படும்.
தள்ளுபடியில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்
இந்த விற்பனையில் இடம்பெறும் என ஃபிளிப்கார்ட் உறுதி செய்துள்ள ஸ்மார்ட்போன்கள் முன்னணி மாடல்களான ஐபோன் 17, சாம்சங் கேலக்ஸி S25 FE, மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ, நத்திங் போன், நடுத்தர மற்றும் பட்ஜெட் மாடல்களான ஒப்போ K14x 5G, விவோ T5 லைட், போக்கோ X8 பவர், ரியல்மி P4 பவர் 5G, மோட்டோ G37 பவர், போல்ட் ஏஸ், Ai+ நோவா 2 பவர் 5G, Ai+ நோவா 2 நியோ, HMD வைப் 2 5G ஆகிய போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
லேப்டாப்களுக்கும் சலுகை அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஹெச்பி 15 லேப்டாப், சாம்சங் கேலக்ஸி புக் 4 சீரிஸ் ஆகியவற்றுக்கும் சலுகைகள் வழங்கப்படும். இவற்றுக்கான தள்ளுபடி விவரங்கள், விற்பனை தொடங்கும்போது வெளியிடப்படும்.
இதையும் படிக்க : வழிக்கு வந்த டெலிகாம் நிறுவனங்கள்.. டேட்டா இல்லாத 3 ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஏர்டெல்!
வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
வங்கிச் சலுகைகள், பழைய போனை மாற்றுவதற்கான எக்ஸ்சேஞ்ச் போனஸ், நேரடித் தள்ளுபடிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தினால், கூடுதல் சேமிப்பு கிடைக்கும். எனினும், ஒவ்வொரு பொருளின் இறுதி விலையும், அதன் மாடல், வகை, வங்கிச் சலுகை, எக்ஸ்சேஞ்ச் விதிமுறைகள் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும். எனவே, ஆர்டர் செய்வதற்கு முன், சலுகைகளையும் நிபந்தனைகளையும் கவனமாகச் சரிபார்த்துக்கொள்வது நல்லது.



