விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம் – வெளியானது அப்டேட்!
Appa Kutty movie digital rights update | தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள படம் அப்பா குட்டி. இந்தப் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை எந்த நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறித்து தற்போது அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவர் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் இசையமைத்த படங்களின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இசையமைப்பாளராக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டி தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தமிழ் மொழியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நூறு சாமி படமும் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் அப்பா குட்டி. இந்தப் படத்தை இயக்குநர் மு. மாறன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகர்கள் பிரீத்தி அஸ்ரானி, சித்ரா லட்சுமணன் உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.




அப்பா குட்டி படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்:
அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த அப்பா குட்டி படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த அப்பா குட்டி படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த அப்பா குட்டி படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#Appakutty & #nanakutty digital rights acquired by @PrimeVideoIN 💥
Another happy association for me ✌🏼
Written & Directed by: @mumaran1
A @Vijayantony Musical 🎵
#Vijayantony @mrsvijayantony @Preethioffl @haripriyaa_off @actorbucks @Aruvimadhan @actormuthukumar @dhivakargj @lizzieantony @MunnarRamesh @748b733cebe946f @sugaa14 @puthiyaparithi @mahesh25071985 #thamuruganandam @cinemapayyan @ProRekha @PROSaiSatish
— vijayantony (@vijayantony) October 27, 2026
Also Read… வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன? சிவகார்த்திகேயன் விளக்கம்