AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் மீசைய முறுக்கு 2… உற்சாகத்தில் ரசிகர்கள்!

Meesaya Murukku 2 Movie OTT Release Update | நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி இயக்கி நாயகனாக நடித்த மீசைய முறுக்கு 2 படம் எப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் மீசைய முறுக்கு 2… உற்சாகத்தில் ரசிகர்கள்!
மீசைய முறுக்கு 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Oct 2026 18:45 PM IST

தமிழ் ரசிகர்களிடையே ஒரு இண்டிபெண்டண்ட் இசை கலைஞராக அறிமுகம் ஆனவர் ஹிப்பாப் தமிழா ஆதி. இவரது இசையில் வெளியான பாடல்கள் அப்போதே ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது. 90ஸ் கிட்ஸ்களிடையே அதிக பரிச்சையமான ஒரு இசைக் கலைஞராக ஹிப்பாப் தமிழா ஆதி வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து படங்களில் பாடல்கள் பாடிய ஹிப்பாப் தமிழா ஆதி இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்தார்.

தொடர்ந்து இசையமைப்பாளராக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஹிப்பாப் தமிழா ஆதி தற்போது தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இசையமைப்பாளராக ஹிட் படங்களுக்கு இசையமைத்து வந்த இவர் தற்போது தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் மீசைய முறுக்கு 2:

அந்த வகையில் ஹிப்பாப் தமிழா ஆதி எழுதி இயக்கி நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் மீசைய முறுக்கு. இந்தப் படத்தில் இவர் மூன்று வேடங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் 25-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மீசைய முறுக்கு 2 படம் வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு சோனி லிவ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… Suriya: டிஎஸ்பி இன்பராஜ்- ஆக சூர்யா.. சீன் படத்திலிருந்து வெளியான சூர்யாவின் கிளிம்ப்ஸ் வீடியோ!

சோனி லிவ் ஓடிடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சீன் படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள்… ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் நஸ்லேன்

Follow Us