யோகி பாபுவின் 300-வது படம்… அர்ஜுனன் பேர் பத்து படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்!
Arjunan Per Pathu Movie Release Update | பான் இந்திய மொழிகளில் குறிப்பாக தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவரது நடிப்பில் 300- வதாக உருவாகி உள்ள படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நடிகர் யோகி பாபு (Yogi Babu). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் காமெடி நடிகராக உச்சத்தில் இருக்கும் போது இவர் நடிக்க வேண்டும் என்பதற்காக பல முன்னணி நடிகர்கள் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. இவர் தொடர்ந்து காமெடி நடிகராக பல நூறு படங்களில் நடித்து உள்ள நிலையில் அவ்வபோது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தொடர்ந்து வருடத்திற்கு 15 முதல் 20க்கும் மேற்பட்ட படங்களில் தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். அதில் ஒரு சில படங்கள் கதையின் நாயகனாக நடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. காமெடி, கதையின் நாயகன் என இரண்டிலும் பிசியாக நடித்து வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அர்ஜுனன் பேர் பத்து.




அர்ஜுனன் பேர் பத்து படத்தின் ரிலீஸ் எப்போது?
இந்த அர்ஜுனன் பேர் பத்து படத்தினை இயக்குநர் ஆர். ராஜ்மோகன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, சென்ட்ராயன் என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படம் வருகின்ற 27-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எங்கு எப்போது தொடங்குகிறது? – விவரங்கள் இதோ!
அர்ஜுனன் பேர் பத்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
🔥 THE DATE IS LOCKED! 🔥
🎬 #ArjunanPerPathu hits theatres on NOVEMBER 27 ❤️🔥
The countdown begins NOW! ⏳💥 Get ready for the big-screen experience! 🍿🔥
📅 NOVEMBER 27 — IN THEATRES!
@iYogiBabu @immancomposer @its_anamikamahi @thangapandi_mdt @DhevCinemasPvt
#TamilCinema https://t.co/EeZTDY1nJ8
— Dhev Cinemas (@DhevCinemasPvt) October 27, 2026
Also Read… ஷாருக்கானின் கிங் திரைப்பட ரிலீஸ் எப்போது? புதிய போஸ்டருடன் தேதி குறித்த படக்குழு!