AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இரவு 11 மணிக்கு மேல் இந்த சேவை கிடையாது.. என்ன தெரியுமா?

Indian Railways Charging Ban | ரயில்களில் சார்ஜ் செய்துக்கொள்ள ஏதுவாக சார்ஜிங் பாயிண்ட்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இனி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மொபைல் போன்களை சார்ஜ் செய்ய முடியாது என முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இரவு 11 மணிக்கு மேல் இந்த சேவை கிடையாது.. என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 28 Oct 2026 07:55 AM IST

சென்னை, அக்டோபர் 28 : இனி ரயிலில் செல்லும் பொதுமக்களால் இரவு 11 மணிக்கு மேல் மொபைல் போனை சார்ஜ் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. ரயில் பெட்டிகளில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை துண்டிக்க  ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், இந்த நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்க ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள முக்கிய முடிவு குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயிலில் செல்போன் சார்ஜ் செய்துக்கொள்ளும் வசதி

பொதுமக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாக மொபைல்போன்  உள்ளது. இதன் காரணமாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப மொபைல் போனை சார்ஜ் செய்துக்கொள்ள ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளிலும் சார்ஜிங் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது மொபைல் போன்களை பொதுமக்கள் சார்ஜ் செய்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : தமிழகத்தில் அடுத்தடுத்து பக் பக்.. செஞ்சியை தொடர்ந்து தி.மலையில் 3 சிறுமிகள் மாயம்.. உறைந்துபோன பெற்றோர்கள்!

இரவு 11 மணிக்கு மேல் ரயிலில் சார்ஜ் செய்ய முடியாது

ரயில் சார்ஜிங் பாயிண்ட்கள் மூலம் ஏராளமான பொதுமக்கள் தங்களது மொபைல் போன்களை சார்ஜ் செய்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இயக்கப்பட்ட ரயிலில் பயணி ஒருவர் பவர் பேங்கை சார்ஜ் செய்துவிட்டு தூங்கிய நிலையில், நள்ளிரவில் அதில் இருந்து புகை வர தொடங்கியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

இதையும் படிங்க : ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50-க்கு கொள்முதல் செய்யும் திட்டம்.. பின்வாங்கிய தவெக அரசு.. நிர்மல்குமார் கொடுத்த ஸ்டேட்மெண்ட்!

இதனை தொடர்ந்து தான் ரயில்வே வாரியத்தின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரயில் பெட்டிகளில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்கள் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை துண்டிக்கப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us