பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20.. டாஸ்மாக் கடையை மூட உத்தரவு.. ரூ.1 கோடி அபராதம்!
1 Crore Rupees Penalty For Ranipet Wine Shop | ராணிப்பேட்டையில் உள்ள மதுபான கடை ஒன்றில் பாட்டிலுக்கு ரூ.20 அதிகமாக கேட்கப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கில் மதுபான கடையை மூடவும் ரூ.1 கோடி அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர், அக்டோபர் 28 : ராணிப்பேட்டையில் (Ranipet) கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டதன் காரணமாக டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அந்த டாஸ்னாக் கடையின் கோட்ட மேலாளர் மற்றும் சம்மந்தப்பட்ட ஊழியருக்கு சுமார் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கூடுதல் விலைக்கு மது விற்பனை – நீதிமன்றத்தில் வழக்கு
ராணிப்பேட்டையில் உள்ள ஸ்கடர் குடியிருப்பை சேர்ந்தவர் 28 வயதான சக்திவேல். இவர் மார்ச் 28, 2026 அன்று ராணிப்பேட்டை பாலாறு பாலம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் பீர் வாங்குவதற்காக சென்றுள்ளார். அதன்படி அவர் மொத்தமாக மூன்று பீர் பாட்டில்களை வாங்கியுள்ளார். ஒரு பீர் பாட்டில் ரூ.170 என்பது அடிப்படையில் மொத்தமாக அவரிடம் ரூ.510 வசூல் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ஒவ்வொரு பாட்டில்களுக்கு ரூ.20 கூடுதலாக என மொத்தம் ரூ.570 வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரயில் பயணிகளே இனி இந்த வசதி கட்.. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நோ அனுமதி.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!




ரூ.1 கோடி அபராதம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அது குறித்து சக்திவேல் கேட்டபோது அவருக்கு முறையான பதில் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், அவர் இது தொடர்பாக மே மாதம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி மீனாட்சி சுந்தரம் விசாரணை செய்தார். இந்த விசாரணையின் முடிவில், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.3,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.1,000 வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க : தமிழகத்தில் அடுத்தடுத்து பக் பக்.. செஞ்சியை தொடர்ந்து தி.மலையில் 3 சிறுமிகள் மாயம்.. உறைந்துபோன பெற்றோர்கள்!
மேலும் சம்மந்தப்பட்ட கோட்ட மேலாளர், ஊழியர் ஆகியோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்றும் கூறி அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.