Tamil Nadu Weather Forecast: தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் சொன்ன தகவல்!!
Weather Today: புயலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. துறைமுகப் பகுதியில் திடீரெனப் பலத்த காற்றுடன் கூடிய மோசமான வானிலை நிலவக்கூடும் என்பதை இந்த எச்சரிக்கை குறிக்கிறது. புயல் ஆந்திரத்தை நோக்கி நகர்வதால், தமிழகத்தில் மழையின் தீவிரம் கணிசமாகக் குறைந்துள்ளது.
சென்னை, அக்.28: தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கடலோர தமிழக பகுதிகளுக்கு நகர்ந்து, அதே பகுதியில் நிலவுகிறது. இலங்கை கடலோர பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இருந்து, ‘அா்னாப்’ மிக தீவிர புயலின் மையம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை காணலாம்.
இதையும் படிக்க : மதுரை சிறுவன் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்.. நண்பனின் தாய் அதிரடியாக கைது.. திடுக் பின்னணி!!
கரையை கடக்கும் அர்னாப் புயல்:
இதனிடையே, வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடந்து வருவதால், அதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. துறைமுகப் பகுதியில் திடீரெனப் பலத்த காற்றுடன் கூடிய மோசமான வானிலை நிலவக்கூடும் என்பதை இந்த எச்சரிக்கை குறிக்கிறது. புயல் ஆந்திரத்தை நோக்கி நகர்வதால், தமிழகத்தில் மழையின் தீவிரம் கணிசமாகக் குறைந்துள்ளது.
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (அக்.28) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், இதர தமிழகத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் நாட்களில் மழை வாய்ப்பு:
தொடர்ந்து, அக்.29 மற்றும் 30ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல், அக்.31ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு:
இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 1ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
இதையும் படிக்க: சிறைவாசம் அனுபவிக்கும் அன்பில் மகேஷ்.. முதல் வகுப்பில் என்னென்ன வசதிகள் வழங்கப்படும்.. அடேங்கப்பா லிஸ்ட் பெருசா போகுது!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.