ஜெயிலர் 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தர்மன் படத்தில் இணையும் நடிகர் நமோ நாராயணா?
Namo Narayana in Dharman Movie | ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கதாப்பாத்திரத்தைவிட அதிக அளவில் வரவேற்பைப் பெற்றப் கதாப்பாத்திரம் நமோ நாராயணா கதாப்பாத்திரம். இவர் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தின் தர்மன் படத்திலும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 2009-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் நாடோடிகள் . இந்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடித்து இருந்தார். இதில் காமெடி அரசியல்வாதியாக நடிகர் நமோ நாராயணா (Namo Narayana) நடித்து இருந்தார். அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நமோ நாராயணனின் கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஈசன், போராளி, இஷ்டம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, குட்டி புலி, நிமிர்ந்து நில், தெனாலிராமன், யாமிரிக்க பயமேன், கொம்பன், வாலு, ரஜினி முருகன், மருது, அப்பா, ஆண்டவன் கட்டளை, கொடி, தொண்டன், தாராள பிரபு, சுல்தான், உடன் பிறப்பே என பல ஹிட் படங்கலில் நடித்து உள்ளார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பலப் படங்களில் நடித்து உள்ள நடிகர் நமோ நாராயணன் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தாலும் நமோ நாராயணா நடிப்பில் வெளியான மூர்த்தி என்ற கதாபபத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.




தர்மன் படத்தில் இணையும் நடிகர் நமோ நாராயணா?
இந்தப் படத்தில் நடிகர் நமோ நாராயணின் மூர்த்தி வேடம் அசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் அவரை நடிக்க வைக்க படக்குழுவினர் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி தர்மன் திரைப்படத்தில் நமோ நாராயணா ஒரு சிறிய, ஆனால் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்தக் கதாபாத்திரம் முதலில் வேறொரு நடிகருக்காகத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், ஜெயிலர் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றி மற்றும் அதில் நமோ நாராயணாவின் நகைச்சுவையான நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பைக் கருத்தில் கொண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே அவரை இந்தக் கதாபாத்திரத்திற்குப் பரிந்துரைத்ததாகத் தெரிகிறது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Dharman x #Jailer2 BUZZ – Moorthy Anna will be back! 😃🔥
#NamoNarayana is said to be playing a small yet interesting character in #Dharman. The character was initially planned for another actor, but following the BLOCKBUSTER SUCCESS of #Jailer2 and the response #NamoNarayana received for his comical performance, #SuperstarRajinikanth himself is said to have recommended him for this character.
— Movies Singapore (@MoviesSingapore) October 27, 2026
Also Read… அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் எங்கு எப்போது தொடங்குகிறது? – விவரங்கள் இதோ!