AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பாசன வசதி இல்லாத விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.1.20 லட்சம் வரை மானியம்! தமிழக அரசு அறிவிப்பு

Subsidy For Farmers: அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைப்பதற்கான செலவில் 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இதற்கான அதிகபட்ச மானியத் தொகை ரூ.1.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாசன வசதி இல்லாத விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.1.20 லட்சம் வரை மானியம்! தமிழக அரசு அறிவிப்பு
கோப்பு புகைப்பட,
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Oct 2026 15:16 PM IST

அக்டோபர் 28, 2026: தமிழகத்தில் பாதுகாப்பான குருவட்டங்களில் பாசன வசதி இல்லாத தனிநபர் பொதுப்பிரிவு விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைப்பதற்கு தமிழக அரசு மானியம் வழங்குகிறது. இதன்படி, தகுதியுள்ள சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் வரையிலும், இதர விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 60% மானியம்

அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைப்பதற்கான செலவில் 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இதற்கான அதிகபட்ச மானியத் தொகை ரூ.1.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இதர தகுதியுள்ள விவசாயிகளுக்கு திட்டச் செலவில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இதன்படி, அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் பெற முடியும்.

மேலும் படிக்க: “கரூரிலே போட்டிருந்தா..” என சர்ச்சைக் கருத்து.. தலைமறைவான திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் அதிரடி கைது!!

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பாதுகாப்பான குருவட்டங்களில் உள்ள பாசன வசதி இல்லாத புஞ்சை நில விவசாயிகளாக இருக்க வேண்டும்.
  •  விண்ணப்பதாரரின் பெயரில் குறைந்தபட்சம் 2 ஏக்கர் புஞ்சை நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.
  •  விண்ணப்பதாரர் கூட்டுறவு அமைப்பின் உறுப்பினராக இல்லாதவராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாத அல்லது தூர்ந்து போன கிணறுகளைக் கொண்ட புஞ்சை நில விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு.. முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!

விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அவை:

  •  விவசாயியின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம்.
  •  ஆதார் அட்டையின் நகல்.
  •  குடும்ப அட்டையின் நகல்.
  •  வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல்.
  •  பட்டா நகல்.
  •  நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் சான்று.
  •  நில வரைபடம்.
  •  சிறு அல்லது குறு விவசாயி என்பதற்கான சான்றிதழ்.

விவசாயிகள் கவனிக்க வேண்டியவை

பாசன வசதி இல்லாத புஞ்சை நிலங்களில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான நீராதாரத்தை உருவாக்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைப்பதற்கான செலவுச் சுமையைக் குறைப்பதன் மூலம், தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் பாசன வசதியை ஏற்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

 

Follow Us