AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ICC Test All-Rounder Rankings: முடிவுக்கு வந்த 4 ஆண்டுகால ஆதிக்கம்.. டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை இழந்த ஜடேஜா!

Ravindra Jadeja Ranking: ஐசிசி டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜாவின் 4 ஆண்டுகால ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. மார்கோ ஜான்சன் தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஜடேஜா இரண்டாம் இடத்திற்குச் சரிந்தார். ஜான்சன் டெஸ்ட் பந்துவீச்சிலும் முதலிடம் பிடித்தார். அதேசமயம், டி20 பேட்டிங்கில் அபிஷேக் சர்மா மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தினார்.

ICC Test All-Rounder Rankings: முடிவுக்கு வந்த 4 ஆண்டுகால ஆதிக்கம்.. டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை இழந்த ஜடேஜா!
மார்கோ ஜான்சன் - ரவீந்திர ஜடேஜா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Oct 2026 16:07 PM IST

ஐசிசி டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜாவின் (Ravindra Jadeja) நீண்ட நாள் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று அதாவது 2026 அக்டோபர் 28ம் தேதி ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசையில், ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் சரிந்து இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். ஜடேஜா கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்தார். இதேபோல், இஷான் கிஷனும் (Ishan Kishan) டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்குச் சரிந்தார். இருப்பினும், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 113 ரன்கள் எடுத்து சாதனை படைத்த இந்தியாவைச் சேர்ந்த அபிஷேக் சர்மா, இந்தப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.

ALSO READ: இந்திய அணிக்குத் திரும்ப மாட்டாரா ஜடேஜா? 2027 ஒருநாள் உலகக் கோப்பை திட்டத்தில் இல்லையா?

முடிவுக்கு வந்த 4 ஆண்டுகால ஆதிக்கம்:


ரவீந்திர ஜடேஜா கடந்த 4 ஆண்டுகளாக டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். சமீபத்திய தரவரிசையில், ஜடேஜா 422 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் சைமன் ஹார்மர், 228 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் 15 இடங்கள் முன்னேறி 8வது இடத்தைப் பிடித்து, முதல் 10 இடங்களுக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார்.

நம்பர் 1 டெஸ்ட் ஆல்-ரவுண்டராக யார்..?

தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் 451 என்ற மதிப்பீட்டுடன் ஐசிசி டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இது அவரது வாழ்நாள் சிறந்த மதிப்பீடாகும். இதனை தொடர்ந்து, முதல் ஐந்து இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. கெபெர்ஹாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜான்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 85 ரன்கள் எடுத்தார்.

ஐசிசி டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் வங்கதேசத்தின் மெஹிடி ஹசன் மிராஸ் 3வது இடத்தில் நீடிக்கிறார். வெய்ன் முல்டர் 4வது இடத்திலும், மிட்செல் ஸ்டார்க் 5வது இடத்திலும் உள்ளனர். ரவீந்திர ஜடேஜாவிற்குப் பிறகு, முதல் 10 இடங்களுக்குள் உள்ள இரண்டாவது இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆவார். இவர் 234 மதிப்பீட்டுடன் 7வது இடத்தில் உள்ளார்.

ALSO READ: காயத்தால் வெளியேறிய இஷான் கிஷன்.. மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ!

மார்கோ ஜான்சன்

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன், டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை எட்டியது மட்டுமல்லாமல், டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஜான்சன் 5 இடங்கள் முன்னேறி, டெஸ்ட் போட்டிகளில் முதல் நிலை பந்துவீச்சாளராக ஆகியுள்ளார். இதன் மூலம், தற்போது இரண்டாம் இடத்திற்குச் சரிந்துள்ள ரவீந்திர ஜடேஜா ஆதிக்கத்திற்கு மார்கோ ஜான்சன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

Follow Us