Joe Root Test Record: காத்திருக்கும் சச்சினின் உலக சாதனை.. முறியடிக்க ஜோ ரூட்-க்கு மேப் போட்டு கொடுத்த இங்கிலாந்து வாரியம்!
ECB Joe Root Contract: ஜோ ரூட் சச்சின் டெண்டுல்கரின் அதிக டெஸ்ட் ரன்கள் உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை நெருங்கியுள்ளார். இங்கிலாந்து வாரியம் (ECB) அவருக்கு 2 ஆண்டு ஒப்பந்தம் வழங்கி ஆதரவு அளித்துள்ளது. சச்சினை விட 1643 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ள ரூட், தனது தற்போதைய ரன் குவிப்பு வேகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த மாபெரும் சாதனையை எட்டிப்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய அணி பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) வைத்திருக்கும் உலக சாதனையை முறியடிக்க, இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்டிற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில், இந்த உலக சாதனையை முறியடிக்க ஜோ ரூட்டிற்கு கிரிக்கெட் கிரிக்கெட் வாரியம் தனது ஆதரவையும் கொடுத்துள்ளது. அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் தற்போது முதலிடத்தில் உள்ளார். ஆனால், இந்த உலக சாதனையை முறியடிப்பதற்கு ஜோ ரூட்டுக்கு (Joe Root) மட்டுமே வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதுதொடர்பான முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.
ALSO READ: திரும்பிய ஃபின் ஆலன், லாக்கி ஃபெர்குசன்.. இந்தியாவிற்கு எதிரான NZ ஒருநாள் அணி அறிவிப்பு!
பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்ற பிறகு ஜோ ரூட் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டார். இது கேப்டனாக அவரது இரண்டாவது பதவிக்காலம் ஆகும். இனி வரும் எதிர்காலத்திலும் அவரே தொடர்ந்து வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) மத்திய ஒப்பந்தங்கள் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எந்தவொரு கிரிக்கெட் வாரியங்களும் பொதுவாக வீரர்களுடன் ஓராண்டு ஒப்பந்தம் செய்யும். ஆனால் ECB ஜோ ரூட்டுடன் ஈராண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூட் இங்கிலாந்து அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால், வருகின்ற 2028 செப்டம்பர் மாதத்திற்குள் சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும்.




சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்..?
ஜோ ரூட் இன்னும் 2 ஆண்டுகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதைத் தொடர்ந்தால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை எளிதாக முறியடிக்க முடியும். ஜோ ரூட் இப்போது சச்சின் டெண்டுல்கரை விட வெறும் 1643 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும், ஜோ ரூட் 169 போட்டிகளில் 14,278 ரன்களும் எடுத்துள்ளனர். ஜோ ரூட் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 1,000 ரன்களை எளிதாகக் குவிப்பார். அடுத்த 2 ஆண்டுகளில் ரூட் 1,644 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடிப்பார்.
ALSO READ: இங்கிலாந்து ஆராய்ச்சி.. கிரிக்கெட் மைதானத்தில் புது முயற்சி.. டி20 ஆடுகளம் எப்படி மாறும்?
2021ம் ஆண்டு முதல், ஜோ ரூட் ஒரு வருடத்தில் மூன்று முறை 1,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அதேநேரத்தில், மீதமுள்ள 2 ஆண்டுகளில் ஒருமுறை 800 மற்றும் 700 ரன்களைக் கடந்துள்ளார். அந்த 1,000 ரன்களுக்குள், ரூட் 2 முறை 1,500 ரன்களைக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2026ம் ஆண்டு ரூட் ஏற்கனவே 500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டும் பார்த்தால், அடுத்த 2 ஆண்டுகளில் ஜோ ரூட் 1,700 ரன்களுக்கு அருகில் எடுப்பது என்பது ஒரு மிக எளிதான காரியமாக இருக்கும். ரூட் இப்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் 2 வருட ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் பொருள், இந்தச் சாதனையை அவசரமாக முறியடிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை சமாளித்தால், சச்சினின் சாதனையை முறியடிப்பார்.