Prithvi Shaw Relationship: காதல் முறிவு.. 26 நாட்களில் மீண்டும் இணைந்த பிருத்வி ஷா – ஆக்ரிதி.. என்ன நடந்தது?
Prithvi Shaw and Akriti Agarwal: இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அக்ரிதி அகர்வால் பிரிந்ததாக முன்பு செய்திகள் வெளியாகின. அக்ரிதி அகர்வால் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகக் கூறி, நிச்சயதார்த்த முறிவுக்குப் பின் மீண்டும் இணைய முடிவெடுத்திருப்பதை உறுதிப்படுத்தினார். குடும்பத்தினருடன் பேசி இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டுள்ளனர். இந்த உறவு முறிவுக்கான காரணங்கள் மற்றும் மீண்டும் இணைந்ததற்கான பின்னணி குறித்து விரிவாகக் காண்போம்.
இந்திய அணியின் (Indian Cricket Team) கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா (Prithvi Shaw) மற்றும் ஆக்ரிதி அகர்வால் பிரிந்துவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியது. இதை ஆக்ரிதி அகர்வாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுருந்தார். அதில், பிருத்வியும் ஆக்ரிதியும் வெளியிட்ட ஒரு பதில், இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, இருவரும் தங்களது நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொண்டு பிரிந்து செல்ல முடிவு செய்ததாக அறிவித்திருந்தனர். ஆனால், இப்போது இருவரும் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளனர். கிடைத்த தகவலின்படி, பிருத்வியும் ஆக்ரிதியும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தநிலையில், இருவருக்கும் இடையில் எதனால் விரிசல் ஏற்பட்டது..? பிரிவுக்கு பிறகு நடந்தது என்ன? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: காதல் முறிவு.. பிரிந்த ஆக்ரிதி அகர்வால் – பிருத்வி ஷா.. காரணம் என்ன?
ஆக்ரிதி அகர்வால் வெளியிட்ட பதிவு:
ஆக்ரிதி அகர்வால் மீண்டும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு, தவறான தகவல்கள் அளிக்கப்பட்டு தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், அதன் காரணமாக தங்களால் நிலைமையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார். பிருத்வி ஷாவுடனான உறவு முறிவு குறித்து ஆக்ரிதி அகர்வால் அளித்த விளக்கத்தில், “நான் எனது நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டபோது, எனக்கு நெருக்கமானவர்களின் கருத்துக்களை, எங்கள் உறவை நன்கு புரிந்துகொண்டவர்களிடம் பகிர்ந்துகொண்டேன். அவர்களின் கண்ணோட்டம், எனது வருங்கால கணவர் மற்றும் எங்கள் உறவு குறித்த எனது பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் தவறாக வழிநடத்தப்பட்டதாக உணர்கிறேன். மேலும், எங்களுக்குத் தேவையான நேர்மையான உரையாடல் இல்லாமல் நாங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டோம்.” என்றார்.




தன்னைத் தவறாக வழிநடத்திய குறிப்பிட்ட நபர்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. இந்தப் பதிவில், ஆக்ரிதி அகர்வால், “எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுக்கும், அவை ஏற்படுத்திய வலிக்கும் நான் முழுப் பொறுப்பேற்கிறேன்.” என்று எழுதியுள்ளார்.
நாங்கள் மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளோம்: ஆக்ரிதி அகர்வால்
அதுமட்டுமின்றி, ஆக்ரிதி அகர்வால் தனது பதிவில் மேலும் எழுதியதாவது, “நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன் வெளிப்படையாகப் பேசி, ஒருவரையொருவர் புரிந்துகொண்டோம். நாங்கள் மீண்டும் ஒன்று சேர முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஒருவருக்கொருவர் போதுமானவர்கள், எங்களுக்கு வேறு யாரும் தேவையில்லை. இப்போதைக்கு, எங்கள் எதிர்காலம் எங்கள் பரஸ்பர நல்லிணக்கம், நம்பிக்கை மற்றும் அன்பின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாங்கள் புதிதாகத் தொடங்குவதால், எங்கள் முடிவை மதிக்கவும்.” என்று எழுதியிருந்தார். இருப்பினும், இது தொடர்பாக பிருத்வி ஷாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.
ALSO READ: கிரிக்கெட் வாழ்க்கையை இதனால்தான் இழந்தேன்.. தவறுகளை ஒப்புக்கொண்ட பிரித்வி ஷா!
மார்ச்சில் நிச்சயதார்த்தம், செப்டம்பரில் உறவு முடிவு
பிருத்வியும் ஆக்ரிதியும் இந்த 2026ம் ஆண்டு மார்ச் மாதம் தங்களது நிச்சயதார்த்தத்தை அறிவித்திருந்தனர். இருப்பினும், அவர்களது உறவு ஆறு மாதங்கள் கூட நீடிக்கவில்லை, கடந்த 2026 செப்டம்பர் மாதம் ஆக்ரிதி பிரிய முடிவு செய்தார்.