AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IPL 2027: ஐபிஎல் 2027ல் தோனி விளையாடுவாரா இல்லையா..? உண்மை சொன்ன சிஎஸ்கே நிர்வாகம்!

Dhoni's IPL 2027 Comeback: மகேந்திர சிங் தோனி ஐபிஎல் 2027ல் விளையாடுவாரா என்ற ரசிகர்களின் கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் பதிலளித்துள்ளார். தோனியின் எதிர்காலம் குறித்து அவர் விரைவில் முடிவெடுப்பார் என்றும், சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தோனியின் வயது மற்றும் உடற்தகுதி குறித்த விவாதங்களுக்கு மத்தியில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

IPL 2027: ஐபிஎல் 2027ல் தோனி விளையாடுவாரா இல்லையா..? உண்மை சொன்ன சிஎஸ்கே நிர்வாகம்!
மகேந்திர சிங் தோனி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Oct 2026 20:10 PM IST

மகேந்திர சிங் தோனிக்கு (MS Dhoni) 40 வயதை கடந்த போதிலும், தொடர்ந்து விளையாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, ஆனால் அவருக்கான ரசிகர் கூட்டம் சற்றும் குறைந்ததாக தெரியவில்லை. இப்போது, ​​ஐபிஎல் 20-வது சீசனில், அதாவது ஐபிஎல் 2027-ல், எம்.எஸ். தோனி விளையாடுவாரா என்பதை உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அறிய விரும்புகிறார்கள். தற்போது, ​​அதற்கான பதிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், தோனி ரசிகர்களிடையே முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ: தோனி-ஜாகீர் இடையே இப்படி ஒரு புரிதலா? ஆச்சர்யத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாதன், ஐபிஎல் 2027 தொடரில் எம்.எஸ். தோனி விளையாடுவாரா இல்லையா என்பது குறித்த முடிவு முழுவதுமாக அந்தந்த அணி நிர்வாகத்திடமே உள்ளது என்றார். இதுகுறித்து சிஎஸ்கே சி.இ.ஓ கூறுகையில், “அது நீங்கள் அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி. நானும் அவரிடம் கேட்க வேண்டும். எம்.எஸ்.தோனி சென்னைக்கு வரும்போது, ​​தனது முடிவை எங்களுக்குத் தெரிவிப்பார். அவர் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாட வாய்ப்புள்ளது என்று நான் நினைக்கிறேன். அவர் இன்னும் ஒரு வீரர் தானே,” என்றார்.

 ஐபிஎல் 2026ல் ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி:

ஐபிஎல் 2026 தொடரில் எம்.எஸ். தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனி ஒவ்வொரு போட்டிக்கும் சிஎஸ்கே அணியுடன் மைதானத்திற்குச் சென்றார். ஆனால், உடற்தகுதிப் பிரச்சினைகள் காரணமாக ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. கடந்த 2026 ஐபிஎல் சீசனில் தோனி ஒரு போட்டியில் கூட இம்பாக்ட் வீரராகக் கூட விளையாடவில்லை. தோனியின் வயது அதிகரித்து வருவதால், அவரது பங்கேற்பு மற்றும் பங்கேற்காமை குறித்த விவாதங்கள் ஒவ்வொரு ஆண்டும் பரவலாக நடைபெறுகின்றன. தோனிக்கு இப்போது 45 வயது ஆகிறது.

ALSO READ: சிஎஸ்கே பயிற்சியாளர் குழுவில் மாற்றம்.. விலகிய மைக் ஹஸ்ஸி! காரணம் என்ன..?

சேப்பாக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாரம்பரிய மரியாதைச் சுற்றில் எம்.எஸ். தோனி பங்கேற்ற பிறகு, அவரது பழைய சக வீரரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் 2027-க்கு மீண்டும் வருமாறு மஹி பாயிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறியிருந்தார்.

Follow Us