மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள்.. கோவை தனியார் கல்லூரி விடுதியில் பரபரப்பு!
Coimbatore College Hostel Worms In Food : கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழக்கள் இருந்தது. இது தொடர்பான வீடியோக காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். வெளியூர்களில் இருந்து இந்த கல்லூரியில் தங்கி இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி உள்ளனர். இவர்களுக்கு கல்லூரி விடுதி நிர்வாகம் சார்பில் தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை மாணவர்கள் சாப்பிட்ட நிலையில் அதில் புழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அதனை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இவை தற்போது வைரலாக பரவி வருகிறது.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள்
தற்போது, இந்த விவகாரம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. குறிப்பாக விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் விடுதி நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால், உணவு தயாரிக்கும் இடம் மற்றும் உணவு பரிமாறப்படும் இடம் ஆகவே முறையாக பராமரிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு சுத்தமாகவும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்வது விடுதி நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாகும்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் சிக்குகிறாரா ஜான் பாண்டியன்.. புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை.. முழு விவரம் என்ன!




கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
இத்தகைய புகார்கள் மாணவர்கள் மத்தியில் எழும்போது, சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு உணவின் தரம் மற்றும் சுகாதார நடைமுறைகளை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக தனியார் கல்லூரி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை.
கல்லூரி மாணவர்கள்- பெற்றோர்கள் கோரிக்கை
தற்போது, கல்லூரி விடுதி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக மாணவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவின் தரம் தொடர்பான புகாரின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த விவகாரம் கல்லூரி நிர்வாகத்திலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ராணிப்பேட்டையில் குழந்தை கடத்தல்.. தவெக ஆதரவாளர் அதிரடி கைது.. வேலூர் மத்திய சிறையில் அடைப்பு!