AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தயாராகும் முதல்வர் விஜய்யின் முகாம் அலுவலகம்: என்னென்ன வசதிகள்?

CM Vijay’s New Office : சென்னை டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள அரசு இல்லம், முதல்வர் விஜய்யின் முகாம் அலுவலகமாகப் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை முதல்வர் விஜய் நேற்றிரவு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். எதில் என்னென்ன வசதிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.

தயாராகும் முதல்வர் விஜய்யின் முகாம் அலுவலகம்: என்னென்ன வசதிகள்?
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Oct 2026 19:55 PM IST

சென்னை, அக்டோபர் 28 : சென்னை டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள அரசு இல்லம், முதல்வர் விஜய்யின் முகாம் அலுவலகமாகப் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை முதல்வர் விஜய் நேற்றிரவு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்வரின் முதன்மையான நிர்வாகப் பணிகள் தொடர்ந்து தலைமைச் செயலகத்திலேயே நடைபெறும் என்றும் பிற பணிகளான முக்கிய சந்திப்புகள் உள்ள பணிகள் மட்டும் அங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாராகும் முதல்வர் விஜய்யின் முகாம் அலுவலகம்

கடந்த மே 10 அன்று முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்துக்கு அவர் தினமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் பயண நேரத்தைக் குறைக்கவும், முதல்வரின் பாதுகாப்புக்காக நீண்ட தொலைவுக்குக் காவல் துறையினர் ஏற்பாடுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமங்களைக் குறைக்கவும், டிஜிஎஸ் தினகரன் சாலை அரசு இல்லம் முகாம் அலுவலகமாக மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : சோப்பு- ஷாம்புவால் ஆற்றில் நுரையா? அமைச்சர் பொறுப்பற்று பேசலாமா? நறுக் குட்டு வைத்த தவாக வேல்முருகன்!

என்னென்ன வசதிகள்?

இந்த முகாம் அலுவலகம், முதல்வர் தங்குவதற்கான இடமாக மட்டுமின்றி, அலுவலகப் பணிகள், அதிகாரிகளுடனான ஆலோசனைகள், முக்கியச் சந்திப்புகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் இடமாகவும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு முதல்வருக்கான தனி அலுவலக அறை, அவரது தனிச் செயலாளர்களுக்குத் தனித்தனி அறைகள், அலுவலகப் பணியாளர்களுக்கான இடவசதி ஆகியவை ஏற்படுத்தப்படுகின்றன.

இதனால், அரசு பணிகள், நிர்வாக ஒருங்கிணைப்புப் பணிகளை ஒரே வளாகத்தில் மேற்கொள்ள முடியும். முதல்வரை சந்திக்க வரும் அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கான சிறிய கூட்ட அரங்கமும் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். இதேபோல், முகாம் அலுவலகத்திலும் பொதுமக்கள் மனு அளிப்பதற்கான வசதிகள் செய்யப்படவுள்ளன. மனு அளிக்க வருவோர் காத்திருப்பதற்கான விசாலமான பகுதி, மனுக்களைப் பெறுவதற்கான இடம், வருகையாளர்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகள் ஆகியவை இதில் அடங்கும். தொலைதூர மாவட்டங்களிலிருந்து வருவோருக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலுவலகப் பணிகளுக்கு இடையே உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையில், உடற்பயிற்சிக் கூடம், பேட்மிண்டன் மைதானம், நடைப்பயிற்சிப் பாதை, பசுமையான புல்வெளி ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன. முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. கட்டட உள்கட்டமைப்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஏற்ற வகையில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு! அந்தமானில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. வெதர்மேன் ஹேமசந்திரன் சொல்லும் தகவல்..’

முதல்வர் ஆய்வு

இந்த நிலையில் முதல்வர் விஜய் அக்டோபர் 27, 2026 அன்று முகாம் இல்லத்துக்குச் சென்ற முதல்வர் விஜய், பணிகள் எந்த நிலையில் உள்ளன, அலுவலகப் பயன்பாட்டுக்கான வசதிகள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதல்வரின் முதன்மையான நிர்வாகப் பணிகள் தொடர்ந்து தலைமைச் செயலகத்திலேயே நடைபெறும். டிஜிஎஸ் தினகரன் சாலை முகாம் அலுவலகம், கூடுதல் ஆலோசனைகள், அதிகாரிகளுடனான சந்திப்புகள், பொதுமக்களின் மனுக்களைப் பெறுதல் போன்றவற்றுக்கான இடமாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும், இந்த இல்லம் முதல்வரின் முகாம் அலுவலகமாகச் செயல்படத் தொடங்கும்.

Follow Us