AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : குழந்தையை ஸ்கூட்டர் ஸ்டோரேஜில் வைத்து ஓட்டிச் சென்ற பெண்.. ஷாக் வீடியோ!

Woman Kept Baby In Scooter Storage While Riding | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை ஸ்கூட்டர் ஸ்டோரேஜில் வைத்து எடுத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : குழந்தையை ஸ்கூட்டர் ஸ்டோரேஜில் வைத்து ஓட்டிச் சென்ற பெண்.. ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Mar 2026 20:59 PM IST

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில் இளம் பெண் ஒருவர் தனது பச்சிளம் கை குழந்தையை ஸ்கூட்டரின் பொருட்கள் வைக்கும் ஸ்டோரேஜ் பகுதியில் வைத்து பூட்டி ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

குழந்தையை ஸ்கூட்டர் ஸ்டோரேஜில் வைத்து எடுத்துச் சென்ற பெண்

ஸ்கூட்டரில் பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்காக சீட்டு கீழ் சிறிது இடம் கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த இடத்தில் பொருட்களை வைத்து சீட்டை மீண்டும் லாக் செய்து ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லலாம். பெரும்பாலானவர்கள் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல அந்த இடத்தை பயன்படுத்துவர். இந்த நிலையில், அந்த பகுதியில் பெண் ஒருவர் தனது கை குழந்தையை வைத்து எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : பைக்கில் விளையாடிக்கொண்டே பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் கையில் குழந்தையை எடுத்துக்கொண்டு வருகிறார். பிறகு ஸ்கூட்டரின் ஸ்டோரேஜை திறக்கும் அவர், குழந்தையை அதனுள் படுக்க வைக்கிறார். பிறகு அந்த ஸ்டோரேஜை மூடி ஸ்கூட்டரை ஓட்டிச் செல்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கும் ரோபோட்.. வைரல் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த பெண்ணின் செயலை கண்டித்து பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us