Viral Video : மெக்சிகோ மெட்ரோவை விட டெல்லி மெட்ரோ சிறப்பாக உள்ளது.. சுற்றுலா பயணி வீடியோ!
Mexico Woman Praising Delhi Metro | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் டெல்லி மெட்ரோ குறித்து வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் தங்களுக்கு ஏற்படும் அனுபவங்கள் குறித்து தங்களது சமூக வலைத்தளங்களின் வீடியோ பதிவிடுவர். அந்த வகையில், இந்தியா வந்த வெளிநாட்டு பெண் ஒருவர், டெல்லி மெட்ரோ குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டெல்லி மெட்ரோ குறித்து வீடியோ வெளியிட்ட பெண்
ஒவ்வொரு நாடும் தனக்கான தனி கட்டமைப்பை கொண்டு இருக்கும். சில நாடுகள் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்து இருக்கும். ஆனால், சில நாடுகள் தொழில்நுட்பத்தில் சற்று பின்தங்கியதாக இருக்கும். இதன் காரணமாக அந்த நாட்டின் சூழல் மற்றொரு நாட்டுடன் ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமானதாக இருக்கும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் உள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் வளரும் நாடுகளின் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : சுகாதாரமற்ற முறையில் பேக் செய்யப்படும் அவல்.. உணவு பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் பொதுமக்கள்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர், டெல்லி மெட்ரோவில் பெண்கள் கோச்சில் ஏறி பயணம் செய்கிறார். அப்போது அந்த ரயில் ஆள் இல்லாமல் இயக்கப்படுவதை கண்டு அவர் வியப்படைகிறார். பிறகு அவர் பெண்கள் கோச்சில் ஏறி பயணம் செய்கிறார். இந்த வீடியோவின் கேப்ஷனில் மெக்சிகோ மெட்ரோவை விட டெல்லி மெட்ரோ மிக சிறப்பாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : தாயால் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் வாடும் குட்டி குரங்கு.. இணையத்தை துயரத்தில் ஆழ்த்திய வீடியோ!
வெளிநாட்டு சுற்றுலா பயணியின் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.