Viral Video : சுகாதாரமற்ற முறையில் பேக் செய்யப்படும் அவல்.. உணவு பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் பொதுமக்கள்!
Workers Packing Poha With Unhygienic Method | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பிரபல அவல் நிறுவனத்தின் அவல் பாக்கெட்டுக்கள் சுகாதாரமற்ற முறையில் பேக் செய்யப்படுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் சுவாரஸ்யமான மற்றும் நகைச்சுவையான வீடியோக்கள் மட்டுமன்றி, குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பிரபலமான அவல் நிறுவனம் ஒன்று அந்த அவல் பாக்கெட்டுக்களை, பேக் செய்வது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அப்படி அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சுகாதாரமற்ற முறையில் அவல் பேக் செய்யும் பிரபல நிறுவனம்
சுத்தம் சோறு போடும் என்ற பிரபலமான பழமொழி ஒன்று உள்ளது. அது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை தான். தூய்மையாக இருப்பது உடல் நடத்திற்கு மட்டுமன்றி, மன நலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக நாம் உட்கொள்ளும் உணவுகள் சுத்தமாக இருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. காரணம் நாம் உட்கொள்ளும் உணவுகள் சுத்தமாக இல்லை என்றால் அதன் மூலம் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், பிரபல அவல் நிறுவனத்தில் அவல் பாக்கெட்டுக்குகள் பேக் செய்யப்படுவது தொடர்பான வீடியோ வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : வீடற்ற சிறுவர்களுக்கு சாலையோரத்தில் கல்வி கற்றுக்கொடுக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
The packaging may look premium and appealing, giving the impression of high-quality poha. However, the extremely unhygienic way in which it is being packed is deeply disturbing.
Where is our food safety authority, Food Safety and Standards Authority of India (FSSAI), and where… pic.twitter.com/dpHMEXw80G— The Nalanda Index (@Nalanda_index) February 18, 2026
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பிரபல நிறுவனத்தின் அவல் பாக்கெட்டுகளை ஊழியர்கள் பேக் செய்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் எந்த வித கை உறைகள், தலை உறைகள் என எதுவும் இல்லாமல் அந்த அவல் பாக்கெட்டுகளை பேக் செய்கின்றனர். அதுமட்டுமன்றி, சில ஊழியர்கள் அந்த அவல்களின் மீது அமர்ந்துக்கொண்டு பேக் செய்கின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.