AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பட்டர் சிக்கன் மசாலாவில் ஐஸ் கிரீம் செய்த இளம் பெண்.. வைரலாகும் வீடியோ!

Woman Made Ice Cream Over Butter Chicken Masala | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் பட்டர் சிக்கன் மசாலாவில் ஐஸ் கிரீம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : பட்டர் சிக்கன் மசாலாவில் ஐஸ் கிரீம் செய்த இளம் பெண்.. வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Mar 2026 00:14 AM IST

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில் இளம் பெண் ஒருவர் பட்டர் சிக்கனில் ஐஸ் கிரீம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பட்டர் சிக்கன் மசாலாவில் ஐஸ் கிரீம் செய்த இளம் பெண்

இந்தியர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக இருப்பது பட்டர் சிக்கன் மசாலா. பெரும்பாலான வட இந்தியர்கள் இந்த உணவை அதிகம் சாப்பிடுவர். இது இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாகவும் உள்ளது. இது சற்று காரமான உணவாக இருக்கும் நிலையில், பெண் ஒருவர் பட்டர் சிக்கன் மசாலாவில் ஐஸ் கிரீம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கும் ரோபோட்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Juliette Moreno (@itsmejuliette)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் ஏற்கனவே சமைத்து வைத்திருந்த பட்டர் சிக்கன் மசாலாவை கையில் வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் அந்த பட்டர் சிக்கன் மசாலாவில் கிரீம் ஊற்றுகிறார். பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு கூழாக அறைக்கிறார். அது அப்படியே ஒரு ஐஸ்கிரீம் கலவை போல தோன்றுகிறது. பிறகு அவர் அதனை ஒரு ஐஸ் கிரீம் கோனில் வைக்கிறார்.

இதையும் படிங்க : Viral Video : போக்குவரத்து காவலரை காரில் இழுத்துச் சென்ற இளைஞர்.. பகீர் வீடியோ!

அந்த பெண்  உண்மையாகவே பட்டர் சிக்கன் மசாலாவை வைத்து ஐஸ் கிரீம் செய்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக உள்ளது.

Follow Us