AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : வகுப்பறையில் மாணவிக்கு ப்ரொபோஸ் செய்த ஆசிரியர்.. வைரல் வீடியோ!

Professor Proposed College Student In Bengaluru | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு ப்ரொபோஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : வகுப்பறையில் மாணவிக்கு ப்ரொபோஸ் செய்த ஆசிரியர்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Mar 2026 18:47 PM IST

சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் அசாத்திய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு ப்ரொபோஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஆசிரியர் மாணவிக்கு ப்ரொபோஸ் செய்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

வகுப்பறையில் மாணவிக்கு ப்ரொபோஸ் செய்த ஆசிரியர்

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி சொல்லி கொடுக்கும் குருக்களாக மட்டுமன்றி, வாழ்க்கையை எவ்வாறு சிறந்த முறையில் வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கும் வழிகாட்டிகளாகவும் உள்ளனர். இந்த நிலையில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் வைத்து சக மாணவர்கள் மத்தியில், மாணவி ஒருவருக்கு ப்ரொபோஸ் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : மனைவியின் மருத்துவ செலவுக்காக டெலிவரி ஊழியரான முதியவர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஆசியர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் உரையாடுகிறார். அப்போது அவர், அந்த வகுப்பை சேர்ந்த மாணவி ஒருவர் தனக்கு ப்ரொபோஸ் செய்ததாகவும், தானும் அந்த மாணவியை காதலிப்பதாக கூறுகிறார். அப்போது அந்த மாணவி எழுந்து இந்த விஷயத்தை தலைமை ஆசிரியரிடம் கொண்டு செல்வேன் என்றும், நான் எப்போது உங்களை காதலிப்பதாக கூறினேன் என்று கேட்கிறார். அதற்கு அந்த ஆசிரியர் முகமது நான் உங்களை காதலிக்கிறேன் என்று நீ கூறவில்லையா என கேட்கிறார். அதற்கான சிசிடிவி ஆதாரங்களும் இருப்பதாக அவர் கூறுகிறார். உடனே அந்த பெண் அவற்றை காட்டும்படி கேட்கிறார்.

இதையும் படிங்க : Viral Video : நகை கடையை சூறையாடிய கொள்ளை கும்பல்.. இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

அப்போது அந்த ஆசிரியர் நாளை பேசுகிறேன் என கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறுகிறார். உடனே அங்கிருக்கும் மாணவர்கள் இணைந்து அவரை தாக்குகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

Follow Us