AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பால்கனியில் திறந்த வெளியில் கழிவறை.. அதிர்ச்சியை ஏற்படுத்திய பெங்களூரு பிளாட்!

Open Toilet In Balcony | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெங்களூரில் உள்ள ஒரு பிளாட்டில் திறந்தவெளி கழிவறை இருப்பது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : பால்கனியில் திறந்த வெளியில் கழிவறை.. அதிர்ச்சியை ஏற்படுத்திய பெங்களூரு பிளாட்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Jun 2026 19:17 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள், நிகழ்வுகள், இடங்கள் மற்றும் மனிதர்கள் என பல வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெங்களூரில் (Bengaluru) உள்ள ஒரு பிளாட்டில் பால்கனியில் கழிவறை அமைக்கப்பட்டு இருப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெங்களூரு பிளாட்டின் வினோத வடிவமைப்பு

வீடு கட்டுவதற்கு சில நெறிமுறைகள் உள்ளன. உதாரணமாக, ஒரு வீடு என்றால் அந்த வீட்டில் ஹால், அறைகள், சமையல் அறை, கழிவறை ஆகியவை இருக்க வேண்டும். அதிலும் இந்த அறைகள் எந்த பகுதிகளில் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் சில நெறிமுறைகள் உள்ளன. உதாரணமாக, அறைகளுக்கு உள்ளேயோ அல்லது அறைகளுக்கு அருகே கழிவறை கட்டப்படும். ஆனால், பெங்களூரில் உள்ள பிளாட்டில் எந்த வித சம்மந்தமும் இல்லாமல் பால்கனியில் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : 2வது மாடியில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு இருந்த சிறுமி.. பத்திரமாக மீட்ட இந்தியர்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் பால்கனி கதவை திறந்துக்கொண்டு வெளியே செல்கிறார். அப்போதுதான் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது, அந்த பால்கனியில் கழிவறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக கழிவறை மூடிய, பாதுகாப்பான பகுதிகளில் அமைக்கப்படும் நிலையில், அந்த கழிவறை திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு கம்பி வேலி மட்டும் போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : கேரளா அன்னாசி தோட்டத்தில் மறைந்திருந்த ராட்ச ராஜ நாகம்.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்.. ஷாக் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us