Viral Video : 2வது மாடியில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு இருந்த சிறுமி.. பத்திரமாக மீட்ட இந்தியர்!
Indian Man Saved 3 Years Old Baby Girl | லண்டனில் வீட்டின் இரண்டாவது மாடியில் தொங்கிக்கொண்டு இருந்த 3 வயது சிறுமியை இந்தியர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில வியப்பூட்டும் விதமாகவும், சில அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், லண்டனில் இந்தியர் ஒருவர் மாடியில் தொங்கிக்கொண்டு இருந்த 3 வயது சிறுமியை பத்திரமாக மீட்ட சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
லண்டனில் 3 வயது சிறுமியை காப்பாற்றிய இந்தியர்
சக மனிதர்களுக்கு ஆபத்து என்றால் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச் சென்று உதவும் உள்ளம் கொண்டவர்கள் மிகவும் அழகான மனிதர்காள பார்க்கப்படுகிறார்கள். அவ்வாறு தங்களது உயிரை பணயம் வைத்து மற்றவர்களை காப்பாற்றும் நபர்களின் வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தான், இந்த இந்தியர் லண்டனில் சிறுமியை காப்பாற்றியது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : தாஜ் மஹால் தண்ணீர் தொட்டியில் ஆட்டம் போட்ட குரங்குகள்.. வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
India. 🇮🇳🇮🇳🇮🇳 Hero prevents tragedy indian man saves 3 year old girl falling from second floor -window in London pic.twitter.com/jByp44lh5X
— Rohit Choudhary (@RohitChoud81632) June 15, 2026
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் வீட்டின் இரண்டாவது மாடியில் வெளியே தொங்கிக்கொண்டு இருக்கிறார். சிறுமி கைகளை விடும் பட்சத்தில் அவர் கீழே விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அந்த சிறுமியை காப்பாற்றுவதற்காக காவல்துறை அதிகாரி ஒருவர் இரண்டாவது மாடியில் நின்றுக்கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க : Viral Video : சிறுவனை எட்டி உதைத்த மனித ரோபோட்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!
அப்போது அந்த வீட்டின் மீது ஏறிய அந்த இந்தியர், கீழே விழும் சிறுமியை தனது தோள் மீது தாங்கி காப்பாற்றுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. அந்த நபருக்கு அங்கிருந்த காவல்துறை அதிகாரி உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.