AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கோவையில் சிறுமிகள் முதல் பெண்கள் வரை ஆடிய வள்ளி கும்மி நடனம்..

கோவையில் சிறுமிகள் முதல் பெண்கள் வரை ஆடிய வள்ளி கும்மி நடனம்..

Sekaran S
Sekaran S | Updated On: 12 Jun 2026 14:48 PM IST

கோவை ரத்தினபுரி பகுதியில் அமைந்து உள்ள அருள்மாரியம்மன் கோவில் முன்பு அசாத்திய சிறப்பு வழிபாடுகளும், அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட கும்மி நடன விழாவும் ஒருங்கிணைக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற சிறுமிகள் முதல் பெண்கள் வரை அனைவரும், ஒரே நிறத்திலான பாரம்பரிய வண்ண ஆடைகளை அணிந்து கைகளில் கும்மித் தாளமிட்டு, முருகப் பெருமான் மற்றும் வள்ளியின் வரலாற்றுப் பாடல்களைப் பாடி, ஆடினர்.

கொங்கு மண்ணின் அசல் பாரம்பரிய கலைகளில் ஒன்றான வள்ளி – கும்மி நடனத்தைத் தமிழகம் மட்டுமின்றி உலகமே அறியச் செய்து, தற்பொழுது ஆலமரம் போல் தழைத்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கோவையின் புகழ்பெற்ற ‘வள்ளி – முருகன் கலைக் குழுவின்’ 10-வது ஆண்டு மெகா விழா, கோவையில் அரங்கேறியது. கலாச்சாரப், பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில், ரத்தினபுரி பகுதியில் இன்று மாலை அரங்கேறிய இந்த பிரம்மாண்ட வள்ளி – கும்மி நடனம் அங்கு கூடி இருந்த பொதுமக்களை கண் கவரச் செய்தது. ​கோவை வள்ளி – முருகன் கலைக்குழு, கடந்த 2017-ஆம் ஆண்டு மிகச் சாதாரண ஒரு சிறு கலைக்குழுவாகத் தனது தூய்மையான கலைப் பயணத்தைத் துவங்கியது. முருகப் பெருமானின் அலாதி ஆசியோடு, கடந்த ஒன்பது ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அரங்கேற்றங்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அசாத்திய சிறப்பு கலை நிகழ்ச்சிகளையும் இக்குழுவினர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்திக் காட்டி உள்ளனர்.

Published on: Jun 12, 2026 02:46 PM
Follow Us