AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : எச்சில் துப்ப வேண்டாம் என கூறியதால் ஆத்திரம்.. முதியவரை சரமாரியாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்!

Old Man Got Beaten Up For Not To Spit On Road | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சாலையில் எச்சில் துப்ப வேண்டாம் என கூறிய முதியவரை ஆட்டோ ஓட்டுநர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video : எச்சில் துப்ப வேண்டாம் என கூறியதால் ஆத்திரம்.. முதியவரை சரமாரியாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Jun 2026 17:26 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், 70 வயது முதியவர் ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன, ஆட்டோ ஓட்டுநர் முதியவரை தாக்க காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

70 வயது முதியவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்

மகாராஷ்டிராவில், சாலை ஓரம் எச்சில் துப்ப வேண்டாம் என கூறியதால், ஆட்டோ டிரைவர் ஒருவர் முதியவரை மிக கடுமையாக தாக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியுடன் நடைபயிற்சி மேற்கொள்ள சென்ற அந்த நபர், ஆட்டோ டிரைவர் சாலையோரத்தில் எச்சில் துப்பு வேண்டாம் என கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அந்த ஆட்டோ டிரைவர் முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : பயிற்சி முடிந்த கையோடு காதலிக்கு ப்ரொபோஸ் செய்த ராணுவ அதிகாரி.. இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், ஆட்டோ டிரைவர் ஒருவர் முதியவரை மிக கடுமையாக தாக்குகிறார். கைகள், கற்களால் என தனது கைகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து சரமாரியாக தாக்குகிறார். அதனை அந்த முதியவரின் மனைவி தடுக்க முயற்சி செய்கிறார். ஆனால், அவற்றை எல்லாம் கண்டுக்கொள்ளாத அந்த ஆட்டோ டிரைவர் தொடர் தாக்குதலில் ஈடுபடுகிறார். இறுதியாக அந்த ஆட்டோ டிரைவர் முதியவரை கீழே தள்ளிவிட்ட நிலையில், அவர் பலத்த காயமடைகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : சீன பெருஞ்சுவரின் மீது கர்பா நடனமாடிய இந்தியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறிய நிலையில், தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

Follow Us