AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : வியட்நாம் விமான நிலையத்தில் கப்ரா நடனமாடிய இந்தியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Indians Performed Garba Dance In Vietnam Airport | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், வியட்நாம் விமான நிலையத்தின் ரன்வேயில் இந்தியர்கள் சில நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Viral Video : வியட்நாம் விமான நிலையத்தில் கப்ரா நடனமாடிய இந்தியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 May 2026 20:42 PM IST

உலகில் நம்மை சுற்றி நடைபெறும் முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், இந்தியர்கள் சிலர் வியட்நாம் (Vietnam) விமான நிலையத்தில் கர்பா நடமாடியது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

வியட்நாம் விமான நிலையத்தில் கர்பா நடனமாடிய இந்தியர்கள்

இந்தியர்கள் இந்தியாவில் மட்டுமன்றி வெளி நாடுகளிலும் பரவலாக வசித்து வருகின்றனர். அவ்வாறு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சிலர் இந்திய பாரம்பரிய நிகழ்வுகள் அந்த வெளிநாடுகளில் நடத்துவது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அந்த வகையில், வியட்நாம் விமான நிலையத்தில் இந்தியர்கள் சிலர் நடனமாடுவது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : வியட்நாமில் நிறவெறிக்கு உள்ளான இந்தியர்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by INDIANS (@indians)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இந்தியர்கள் சிலர் வியட்நாம் விமான நிலையத்தின் ரன்வேயில் கர்பா நடனமாடுகின்றனர். அதனை  அங்கிருக்கும் வெளிநாட்டவர்கள் சிலர், வியப்புடன் எதிர்வினை ஆற்றுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : புனே மெட்ரோ ரயிலில் பெய்த மழை.. பயணிகள் அவதி.. இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், இந்தியர்களின் அந்த செயலை கண்டித்து பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். வெளிநாட்டவர்களை தொந்தரவு செய்யும் விதமாகவும், அவர்களது கலாச்சாரத்தை தொந்தரவு செய்து வருவதாகவும் இந்தியர்களின் நடவடிக்கைகள் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வியட்நாம் விமான நிலையத்தின் ரன்வேயில் நடனமாடிய இந்தியர்களின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us