Viral Video : புனே மெட்ரோ ரயிலில் பெய்த மழை.. பயணிகள் அவதி.. இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!
Pune Metro Coach Leaks | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் புனே மெட்ரோ ரயிலில் மழைநீர் ஒழுகும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக உள்ளது. இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் குற்ற மற்றும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், பாதுகாப்பற்றதாகவும் இருக்கும் சில சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் இடம்பெறும். அந்த வகையில், புனே மெட்ரோ ரயிலில் மழை பெய்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புனே மெட்ரோ ரயிலில் பெய்த மழை – பயணிகள் அவதி
இந்தியாவில் கோடைக்காலம் நிலவி வருகிறது. இதற்கிடையே சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. அந்த வகையில் புனேவில் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. இந்த நிலையில், புனேவில் பெய்த மழை காரணமாக மெட்ரோ ரயிலில் மழைநீர் ஒழுகியுள்ளது. இதனை அந்த ரயிலில் பயணம் செய்த பயணர்கள் சிலர் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.
இதையும் படிங்க : Viral Video : Morning Running-ல் வெண்ணெய் எடுத்த தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
The Pune Metro couldn’t handle the rain, causing waterlogging in coaches.#PuneMetro #Pune #maharashtra pic.twitter.com/4npViIq7Gb
— Siraj Noorani (@sirajnoorani) May 23, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், புனேவில் சில பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர். அந்த மெட்ரோ ரயிலில் மழைநீர் ஒழுகும் நிலையில், பயணம் செய்யும் பொதுமக்கள் மழை ஒழுகாத பகுதிகளில் ஒதுங்கி நின்றுக்கொண்டு இருக்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : திடீரென பறந்த இந்தோனேசியா பெண்ணின் துப்பட்டா.. தண்டவாளத்தில் இறங்கி எடுத்த நபர்!
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.