AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : திடீரென பறந்த இந்தோனேசியா பெண்ணின் துப்பட்டா.. தண்டவாளத்தில் இறங்கி எடுத்த நபர்!

Man Jumped In Railway Track | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இந்தியர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் குதித்து இந்தோனேசிய இளம் பெண்ணின் துப்பட்டாவை எடுத்து கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : திடீரென பறந்த இந்தோனேசியா பெண்ணின் துப்பட்டா.. தண்டவாளத்தில் இறங்கி எடுத்த நபர்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 May 2026 23:40 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ரயிலில் நின்றுக்கொண்டு  இருந்த இந்தோனேசியா பெண்ணின் துப்பட்டாவை அங்கிருந்த நபர் எடுத்து கொடுத்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தோனேசியா பெண்ணின் துப்பட்டாவை எடுத்து கொடுத்த நபர்

வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவது வழக்கம். அவ்வாறு சுற்றுலா வரும் பயணிகள் தங்களது பயணத்தை முழுவதுமாக பதிவு செய்கின்றனர். இந்த நிலையில், தங்கள் பயணத்தின் போது ஏற்படும் சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து அவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். அந்த வகையில் தான், இந்தோனேசியா பெண்ணின் துப்பட்டா கீழே விழுந்த நிலையில், அதனை இந்தியர் ஒருவர் எடுத்து கொடுத்த வீடியோவை அந்த பெண் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : இந்தோனேசியாவில் கண்ணை பறித்த வானவில் கோலம்.. வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Indah A.L ᢉ𐭩 (@indaha.l)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இந்தோனேசியா பெண் ஒருவர் ரயிலின் படிகட்டில் நின்றுக்கொண்டு இருக்கிறார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருக்கும் துப்பட்டா பறந்து கீழே விழுகிறது. அதனை கண்டதும் அங்கிருக்கும் நபர் ஒருவர் அதனை பிடிக்க முயற்சி செய்கிறார். ஆனால், அந்த துப்பட்டா ரயில் தண்டவாளத்தில் விழுகிறது. உடனே அந்த நபர் ரயிலிக்கு அடியே சென்று, ரயில் தண்டவாளத்தில் இறங்கி துப்பட்டாவை எடுக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பிளிங்கிட் டெலிவரி ஊழியருக்கு காசு மாலை கொடுத்த குடும்பம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us