AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : நியூயார்க் கனமழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்!

Woman Swept Away By Flood | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், நியூயார்க் மாகாணத்தில் இளம் பெண் ஒருவர் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் பெண் ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : நியூயார்க் கனமழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 May 2026 21:57 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், அமெரிக்காவின் (America) நியூயார்க் (Newyork) மாகாணத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையில் பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்வது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நியூயார்க்கில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : காற்றில் தூக்கி வீசப்பட்ட ஷெட்.. வானத்தில் பறந்த நபர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண்கள் சிலர் பேருந்தில் இருந்து இறங்கி செல்கின்றனர். பேருந்துக்கு வெளியே கனமழை கொட்டித் தீர்க்கிறது. அப்போது ஒரு பெண் சாலையில் ஓடும் மழைநீரில் விழுந்து எழுந்து செல்கிறார். அவரை தொடர்ந்து மற்றொரு பெண் கீழே இறங்குகிறார். அப்போது கால் தடுமாறி கீழே விழும் அவர், மழைநீரில் அடித்து செல்லப்படுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : உணவகத்தில் பீட்சா தயாரிக்கும்போது எச்சில் துப்பிய நபர்.. இணையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் மிகுந்த அதிர்ச்சியுடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

Follow Us