Viral Video : காற்றில் தூக்கி வீசப்பட்ட ஷெட்.. வானத்தில் பறந்த நபர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
Man Flew Away With Tin Shed In UP | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தி வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், மழைக்காக டின் ஷெட் கீழ் அமர்ந்திருந்த நபர் அந்த ஷெட் உடன் தூக்கி வீசப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். உலகில் நம்மை சுற்றி நடைபெறும் முக்கிய மற்றும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இதில் இடம்பெறும். அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் பெய்த இடியுடன் கூடிய கனமழை காரணமாக ஒருவர் காற்றில் பறக்கம் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் இந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
உத்தர பிரதேசத்தில் காற்றில் பறந்த நபர் – அதிர்ச்சி சம்பவம்
உத்தர பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில் நேற்று (மே 13, 2026) இடி மின்னல் உடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில், அந்த பகுதியில் ஒருவர் மழைக்காக டின் ஷெட்டின் கீழ் அமர்ந்துள்ளார். இந்த நிலையில், பலத்த காற்று மற்றும் மின்னல் வெட்டியுள்ளது. அப்போது பலத்த காற்று வீசிய நிலையில் அந்த ஷெட் பறந்துள்ளது. அப்போது ஷெட்டின் கீழ் அமர்ந்திருந்த நபரும் தூக்கி வீசப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : பிளிங்கிட் டெலிவரி ஊழியருக்கு காசு மாலை கொடுத்த குடும்பம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வெளியாகி வைரலாகி வீடியோ
This real video shows a person being thrown into the air while holding onto a tin roof as strong winds tore it off a house during the storm in Bareilly, Uttar Pradesh, India.
LATEST: Death toll rises to 89, with 53 people injured. https://t.co/zf8V9LtH7g pic.twitter.com/fJl3QqaiAd
— Weather Monitor (@WeatherMonitors) May 14, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், வெள்ளை நிற டின் ஷெட் காற்றில் பறந்தது. அப்போது அதன் உடன் சேர்ந்து ஒருவர் காற்றில் பறக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிபாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : தண்ணீருக்காக நீண்ட வரிசையில் நின்றுக்கொண்டு இருக்கும் குடியிருப்பு வாசிகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அதிர்ச்சியுடன் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.