AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : உணவகத்தில் பீட்சா தயாரிக்கும்போது எச்சில் துப்பிய நபர்.. இணையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ!

Man Spit On Pizza While Making It | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், உணவகம் ஒன்றில் பீட்சா தயாரித்துக்கொண்டு இருந்த ஊழியர் ஒருவர் அதில் எச்சில் துப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : உணவகத்தில் பீட்சா தயாரிக்கும்போது எச்சில் துப்பிய நபர்.. இணையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 May 2026 21:14 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இருக்கும். அந்த வகையில், உணவகம் ஒன்றில் ஊழியர் ஒருவர் பீட்சா சமைக்கும்போது அதில் எச்சில் துப்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

பீட்சா சமைக்கும்போது எச்சில் துப்பிய ஊழியர் – ஷாக் சம்பவம்

உலகம் முழுவதும் நடைபெறும் சுவாரஸ்ய மற்றும் குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. உணவகங்கள், மால்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதன் காரணமாக அங்கு நடைபெறும் சிக்கல்கள் தொடர்பாக வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில், நொய்டாவில் உணவகம் ஒன்றில் ஊழியர் ஒருவர் பீட்சாவில் எச்சில் துப்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : தண்ணீருக்காக நீண்ட வரிசையில் நின்றுக்கொண்டு இருக்கும் குடியிருப்பு வாசிகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நொய்டாவில் உள்ள ஒரு உணவகத்தில் ஊழியர் ஒருவர் பீட்சாவுக்காக மாவு தயார் செய்துக்கொண்டு இருக்கிறார். அப்போது அவர், அந்த மாவில் எச்சில் துப்புகிறார். இது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ரயில் இருக்கைகளின் கவர்களை கிழித்து எறிந்த இளைஞர்கள்.. இணையத்தில் கடும் கண்டனம்!

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளான நிலையில் போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். அந்த ஊழியரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us