திருப்பத்தூரில் வாகன ஓட்டிகளுக்கு தக்காளி கொடுத்த போலீசார்
திருப்பத்தூர் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரவின் குமார் தலைமையிலான போலிசார் சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜின்னா சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தங்களின் பாதுகாப்பிற்காக கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகளை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பத்தூர் போக்குவரத்து காவல் துறை சார்பில் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்தநிலையில் திருப்பத்தூர் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரவின் குமார் தலைமையிலான போலிசார் ஜின்னா சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தங்களின் பாதுகாப்பிற்காக கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகளை வழங்கினார். விபத்து அபாயத்தை உணர்ந்து முறையாக தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துறை போலிசார் அவர்களின் பொறுப்புணர்வை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக தக்காளிப் பழங்களை பரிசாக
கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
