சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இது நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக தங்கத்தின் விலை 2,080 ரூபாய் வரை குறைந்தது.