ஓய்வு பெற்ற பிறகும் மனிதநேய சேவையை தொடரும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தனது ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை குரங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக செலவழித்து வரும் 76 வயது மூதாட்டி தற்போது பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார். மதுரையைச் சேர்ந்த மாலதி, தமிழ்நாடு காவல்துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குநராகவும், கொடைக்கானலில் உள்ள சர்வதேச பள்ளியிலும் பணியாற்றியுள்ளார்.