AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கைக்குழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் தலை உச்சியில் நூல் வைப்பது ஏன்?

கைக்குழந்தைகளின் நரம்பு மண்டலம் முழுமையாக வளர்ச்சி அடையாததால், பால் குடிக்கும் போது காற்றை உள்ளிழுப்பதன் காரணமாக உதரவிதான தசை சுருங்கி அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. குழந்தையின் மென்மையான தலை உச்சியில் ஈரமான நூலை வைக்கும் போது ஏற்படும் திடீர் குளிர்ச்சி உணர்வு, குழந்தையின் மூளையை சட்டென்று திசைதிருப்புகிறது.

கைக்குழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் தலை உச்சியில் நூல் வைப்பது ஏன்?
குழந்தைImage Source: Freepik
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 27 Jun 2026 18:00 PM IST

தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு சுவாரசியமான வீட்டு வைத்தியம், கைக்குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும் போது அவர்களின் தலை உச்சியில் நூலை நனைத்து வைப்பதாகும். குழந்தை பிறந்த சில மாதங்களில் அடிக்கடி விக்கல் எடுப்பது இயல்பான ஒரு நிகழ்வுதான். அவ்வாறு விக்கல் எடுக்கும் போதெல்லாம், வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒரு சிறிய நூல் துண்டையோ, துணி நூலையோ எடுத்து, அதில் தாய்ப்பாலையோ அல்லது நீரயோ நனைத்து குழந்தையின் தலை உச்சியில் (சுழி இருக்கும் பகுதியில்) வைப்பார்கள். இவ்வாறு செய்த சில நிமிடங்களிலேயே குழந்தையின் விக்கல் நின்றுவிடுவதை நாம் பலமுறை பார்த்திருப்போம். இந்த எளிய செயல்முறைக்கு பின்னால் மூடநம்பிக்கை ஏதேனும் இருக்கிறதா அல்லது ஏதேனும் தர்க்கரீதியான காரணம் இருக்கிறதா என்று பலருக்கும் சந்தேகம் எழுவதுண்டு.

மூளையின் கவனத்தை திசைதிருப்புதல்

இந்த வழக்கத்தின் பின்னணியில் உள்ள மிக முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுவது குழந்தையின் கவனத்தை திசைதிருப்புவதாகும் (Distraction). கைக்குழந்தைகளின் நரம்பு மண்டலம் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது. விக்கல் என்பது உதரவிதானம் (Diaphragm) எனப்படும் தசை சுருங்குவதால் ஏற்படும் ஒரு தன்னிச்சையான செயலாகும். குழந்தையின் உச்சந்தலையில் ஈரமான நூலை வைக்கும் போது, திடீரென ஏற்படும் அந்த குளிர்ச்சியான உணர்வு மற்றும் தொடுதல் உணர்வை குழந்தையின் மூளை சட்டென்று கவனிக்கும். இந்த திடீர் மாற்றத்தால் மூளையின் கவனம் விக்கலில் இருந்து விலகி, உச்சந்தலையின் குளிர்ச்சிக்கு மாறுகிறது. இதன் காரணமாக உதரவிதானத்தின் சுருக்கம் சீராகி விக்கல் உடனடியாக நின்றுவிடுகிறது.

உச்சந்தலை மென்மை மற்றும் உடல் வெப்பநிலை

குழந்தைகளின் தலை உச்சிப் பகுதி (Fontanelle) மிகவும் மென்மையாகவும், நரம்புகள் அதிகம் நிறைந்த பகுதியாகவும் காணப்படும். உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் இந்த பகுதிக்கு முக்கியப் பங்கு உண்டு. விக்கல் எடுக்கும் போது குழந்தையின் சுவாசத்திலும், உடல் இயக்கத்திலும் லேசான மாற்றம் ஏற்படும். அந்த நேரத்தில் உச்சந்தலையில் ஈரமான நூலை வைப்பதன் மூலம், அந்த குறிப்பிட்ட இடத்தின் வெப்பநிலை சற்றே குறைகிறது. இந்த லேசான வெப்பநிலை மாற்றம் குழந்தையின் நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகிறது. பெரியவர்கள் செய்யும் இந்த எளிய செயல், குழந்தையின் உடலை இயல்பு நிலைக்குக் கொண்டு வர மறைமுகமாகத் துணைபுரிகிறது என்பதே உண்மை.

அறிவியல் ரீதியான மருத்துவப் பார்வை

நவீன மருத்துவ உலகம் இந்த நூல் வைக்கும் பழக்கத்தை ஒரு பெரிய மருத்துவத் தீர்வாகப் பார்க்கவில்லை என்றாலும், இதனால் குழந்தைக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஆபத்துகளும் ஏற்படுவதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, கைக்குழந்தைகளின் செரிமான மண்டலம் மற்றும் நரம்பு மண்டலம் வளரும் பருவத்தில் இருப்பதால், பால் குடிக்கும் போது காற்றை உள்ளிழுப்பதனால் விக்கல் வருவது சகஜம். பொதுவாகவே விக்கல் என்பது சில நிமிடங்களில் தானாகவே நின்றுவிடக்கூடிய ஒன்றுதான். நாம் நூல் எடுத்து நனைத்து வைக்கும் நேரத்திற்குள் விக்கல் தானாகவே நிற்கும் நிலையை அடைந்திருக்கலாம் என்றும், அல்லது கவனத் திசைதிருப்பல் மூலமாக அது நின்றிருக்கலாம் என்றும் கூறப்ப்படுகிறது.

Follow Us