அரசன் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி எப்போது இணைவார்? வைரலாகும் தகவல்
Actor Vijay Sthupathi | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் அரசன் படத்தின் படப்பிடிப்பில் அவர் எப்போது கலந்துகொள்ள உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் வருடத்திற்கு குறைந்தது மூன்று படங்களாவது திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் முதலாவதாக வெளியானது காந்தி டால்க்ஸ் படம். இந்தப் படம் முழுக்க முழுக்க வசனம் இல்லாமல் சைகை மொழியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வித்யாசமான பாணியில் உருவாக்கப்பட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது, இந்தப் படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் மட்டும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 5-க்கும் மேற்பட்ட படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி அவ்வபோது இணையதள தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பும் மக்களிடையே பாராட்டப் படுகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி உள்ளது.
அரசன் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி எப்போது இணைவார்?
விஜய் சேதுபதி தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்த பிறகு, நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் எழுதி இயக்கிவரும் அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
New Film — #VijaySethupathi is currently acting in a film directed by #KiruthigaUdhayanidhi. The shooting of this film is currently happening in Chennai. After completing the first schedule of this film, Vijay Sethupathi will join the shooting of #ARASAN next. pic.twitter.com/N7Bw4mKSFA
— Movie Tamil (@_MovieTamil) June 27, 2026
Also Read… Mandaadi: டோலிவுட் நடிகர் சுஹாஸின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்ட மண்டாடி படக்குழு!


