சுந்தர் சி – குஷ்பூ தம்பதியின் மூத்த மகள் திருமணம்… ஒன்று கூடிய பிரபலங்கள்
Sundar C - Khushbu eldest daughter wedding photos viral on social media | தமிழ் சினிமாவில் பிரபலங்களாக வலம் வருபவர்கள் சுந்தர் சி - குஷ்பூ தம்பதி. இவர்களின் மூத்த மகள் திருமணம் நேற்று நடைப்பெற்ற நிலையில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வருபவர்கள் சுந்தர் சி மற்றும் குஷ்பூ ஆவர். இவர்கள் இருவரும் படங்களில் ஒன்றாக பணிபுரியும் போதே காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். நடிகை குஷ்பூ 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக அவர் பல ஹிட் படங்களில் நடித்து உள்ளார். 90-களின் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் அதனைத் தொடர்ந்து நாயகன்களுக்கு அக்காவாகவும், அண்ணியாகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். அதே நேரத்தில் சுந்தர் சி தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
பிறகு தமிழ் சினிமாவில் இயக்குநராக பணியாற்ற தொடங்கிய இவர் பலர் சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார். மேலும் தொடர்ந்து இயக்குநராக பணியாற்றிய இவர் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து படங்களில் நாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போது இயக்குநராகவும் நாயகனாகவும் வலம் வருகிறார். இந்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருமே சினிமாவில் தற்போது எண்ட்ரி கொடுத்து உள்ளனர். அதன்படி மூத்த மகள் அவந்திகா நடிகையாகவும் இளைய மகள் அனந்திதா தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
சுந்தர் சி – குஷ்பூ மகள் திருமணத்தில் குவிந்த பிரபலங்கள்:
இந்த நிலையில் நேற்று சுந்தர் சி மற்றும் குஷ்பூ தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் மிகவும் கோலாகலமாக நடைப்பெற்றது. இந்த திருமண விழாவில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல நட்சத்திரங்கள் அந்த திருமண விழாவில் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… கான் சிட்டி டூ ஹார்ட்டின்… இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
@TrishaKrishnan joins a star-studded celebration as Tollywood’s finest gather for the wedding festivities of #Kushboo & #SundarC’s daughter…. pic.twitter.com/DWwSSyiugs
— Rahman (@Rahmanabdul001) June 25, 2026
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
❤️✨Celebrities At #Kushboo‘s Daughter’s Pre-wedding Ceremony in Goa Clicks.💕✨📸#kushboo #trishakrishnan #trisha #actresses #HappyMarriageLife #khusbhoo #TamilGalattaUpdates #daughterlove pic.twitter.com/3G3cBVmHFd
— Tamil Galatta Updates (@GalattaUpdates) June 26, 2026
Also Read… பெண்கள் மீதான ஸ்டீரியோடைப்பை பிளாஸ்ட் செய்த பிளாஸ்ட் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ!



