4 ஆண்டுகளை நிறைவு செய்தது விஜய் சேதுபதியின் மாமனிதன் படம்
4 Years Of Maamanithan | நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் முன்பு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படம் தற்போது 4 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகின்றது. இவர் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினாலும் தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 24-ம் தேதி ஜூன் மாதம் 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மாமனிதன். இந்தப் படத்தை இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கி உள்ளார். ஃபீல் குட் ஃபேமிலி செண்டிமெண்ட் பாணியில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் காயத்ரி, குரு சோமசுந்தரம், கே.பி.ஏ.சி.லலிதா, ஷாஜி சென், ஜூவல் மேரி, அனிகா சுரேந்திரன், ரகு ஆதித்யா, மணிகண்டன் ஆர். ஆச்சாரி, கஞ்சா கருப்பு, மானஸ்வி கொட்டாச்சி, சரவண சக்தி, ஏ. கோவிந்தமூர்த்தி, கலாபவன் மணி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்து இருந்தனர். படத்தை போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




4 ஆண்டுகளை நிறைவு செய்தது மாமனிதன் படம்:
தமிழ் சினிமாவில் உள்ள YSR ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் ஷான் சுதரசன் இருவரும் இணைந்து தயாரித்து இருந்தனர். நேர்மையான ஆட்டோ ஓட்டுநராக உள்ள விஜய் சேதுபதி நடிகை காயத்திரியை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். மகிழ்ச்சியான குடும்பமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இப்படி இருக்கும் நிலையில் ஒரு ஃப்ராட் கும்பல் விஜய் சேதுபதி மூலம் அந்த ஊரில் உள்ள மக்களிடையே பணத்தை வாங்கி அரசு நிலத்தை விற்றுவிட்டு சென்று விடுகிறார்கள். இதனை அறிந்த மக்கள் விஜய் சேதுபதியை தேட அவர் ஊரைவிட்டு தலைமறைவாகிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
Also Read… Priyanka Deshpande: அப்பா அம்மா ஆயாச்சு… ஹேப்பி நியூஸ் சொன்ன தொகுப்பாளினி பிரியங்கா தேஷாபாண்டே!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#4YearsOfMaaManithan #YuvanShankarRaja #VijaySethupathi #SeenuRamasamy@VijaySethuOffl @seenuramasamy pic.twitter.com/oj7yBkSNFS
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) June 23, 2026