AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விறுவிறுப்பாக நடைபெறும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு

Vishwanath and Sons movie final stage shooting update | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது.

விறுவிறுப்பாக நடைபெறும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு
விஸ்வநாத் & சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jun 2026 21:44 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் ஃபேமிலி செண்டிமெண்ட் ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அதன்படி நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், சுனில் ரெட்டி, பவானி ஸ்ரீ, காளி வெங்கட், ராஜ்கமல் ஷெஃபி மற்றும் ஜோர்ன் சுர்ராவ்  என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ள நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இருந்து சமீபத்தில் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக நடைபெறும் விஸ்வநாத் & சன்ஸ் பட படப்பிடிப்பு:

இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பின் இறுதிக்கட்டம் தற்போது அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. விரைவில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் தொடர்பான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… JIO Movie: மீண்டும் வந்தது SMS காம்போ.. ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் பட டீசர் வெளியானது!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Toxic: என்னப்பா ரெடியா?.. யாஷின் அதிரடி கேங்ஸ்டர் படமான ‘டாக்ஸிக்’ புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Follow Us