AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லவ், ட்ராமா, ஆக்‌ஷன், த்ரில்லர் – வெளியானது அர்ஜுன் தாஸின் கான் சிட்டி பட ட்ரெய்லர்

Con City Movie Official Trailer Out Now | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ள அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்து அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கான் சிட்டி. இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

லவ், ட்ராமா, ஆக்‌ஷன், த்ரில்லர் – வெளியானது அர்ஜுன் தாஸின் கான் சிட்டி பட ட்ரெய்லர்
கான் சிட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 20 Jun 2026 20:37 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகர் அர்ஜூன் தாஸ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நாயகனாக மட்டும் இன்றி வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகர் அர்ஜுன் தாஸ் தாஸ் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் கான் சிட்டி. லவ், ட்ராமா, ஆக்‌ஷன், த்ரில்லர் என அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் ஹரிஷ் துரை ராஜ் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படம் வருகின்ற 26-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன், சாக்ஷி வைத்யா, நந்த கோபால், வி.டி.வி கணேஷ், தீபா ராமானுஜம், ராதா ரவி, அருள் தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இம்மான் அண்ணாச்சி, மதன் தட்சிணாமூர்த்தி, பொன்வண்ணன், ரகு எசகி, சதானந்த் என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

வெளியானது அர்ஜுன் தாஸின் கான் சிட்டி பட ட்ரெய்லர்:

அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் தம்பதிக்கு ஒரு நடக்க இயலாத ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையை சிலர் கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். அந்த பணத்திற்காக இவர்கள் குடும்பமாக என்ன என்ன செய்கிறார்கள் என்பது தான் இந்தப் படத்தின் கதை. இந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது படம் நிச்சயமாக சூப்பராக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read… Heartin: முக்கோண காதல் கதையில்… மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள ஹார்ட்டின் பட ட்ரெய்லர் வெளியானது!

கான் சிட்டி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இயக்கும் ஹீரோ இவரா? வில்லனும் இவர்தான்!

Follow Us