சூர்யாவின் ரீல் மகனை கொஞ்சி விளையாடும் மமிதா பைஜூ – வைரலாகும் வீடியோ
Mamitha Baiju plays with a kid video goes viral | தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படப்பிடிப்பு தளத்தில் இருந்து மமிதா பைஜுவின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மமிதா பைஜூ. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மலையாள சினிமாவில் தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வந்த மமிதா பைஜூ பிரேமலு படத்தின் வெளியீட்டிற்கு பிறகு தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை மமிதா பைஜூ நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை அடுத்தடுத்து டியூட் மற்றும் கர ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை மமிதா பைஜூ நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம். நடிகர் சூர்யா இந்தப் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார்.
இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ள இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் மமிதா பைஜு உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் வீடியோவான பட்டாம்பூச்சி பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




சூர்யாவின் ரீல் மகனை கொஞ்சி விளையாடும் மமிதா பைஜூ:
அதன்படி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகின்றது. அந்த படப்பிடிப்பு தளத்தில் நடிகை மமிதா பைஜூ படத்தில் சூர்யாவின் குழந்தையாக நடித்த குழந்தையை கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… விஜய் அமைதியாகவும் அதிகம் பேசாதவராகவும் மாற அதுதான் காரணம் – தாய் ஷோபா சந்திரசேகர் ஓபன் டாக்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Shooting spot #VishwanathAndSons pic.twitter.com/DzntoWu9vd
— Kerala Suriya Fans – KSF ™ (@KSF_Offl) June 23, 2026
Also Read… தயாராகி வரும் சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகம்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்