AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எங்கள் ஜன நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் – கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்ட போஸ்ட்

Jana Nayagan Movie | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்த நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக உருவாகி உள்ள படம் ஜன நாயகன். தொடர்ந்து சென்சார் பிரச்சனையில் உள்ள இந்தப் படத்தின் குழுவினர் தற்போது முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களுக்கு பிறந்த நாள் பதிவை வெளியிட்டுள்ளது.

எங்கள் ஜன நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் – கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்ட போஸ்ட்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jun 2026 21:02 PM IST

தமிழ் சினிமாவில் 1984-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் தளபதி விஜய். இவர் தொடர்ந்து 1988-ம் ஆண்டு வரை சுமார் 4 ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரமாக பலப் படங்களில் நடித்துள்ளார். பிறகு கடந்த 1992-ம் ஆண்டு தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எழுதி இயக்கிய நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பல நெகட்டிவான விமர்சனங்களை சந்தித்தாலும் அவை அனைத்தையும் பாசிட்டிவாக மாற்றி தனது கடின உழைப்பின் காரணமாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக மாறினார். தொடர்ந்து ஃபேமிலி செண்டிமெண்ட், ஆக்‌ஷன், ரொமாண்டிக் என பல ஜானர்களில் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொடர்ந்து இதுவரை நடிகர் தளபதி விஜய் நடிப்பில் அடுத்தடுத்து 68 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி இறுதியாக நடிகர் விஜய் நடிப்பில் 69-வது படமாக உருவாகி உள்ள ஜன நாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ளது. தொடர்ந்து இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்க தமிழக அரசியலில் கட்சியை தொடங்கி நடிகர் விஜய் முதலமைச்சராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் ஜன நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்:

தொடர்ந்து ஜன நாயகன் படத்தின் பிரச்சனை ஒரு பக்கம் இருந்து வந்த நிலையில் முதலமைச்சராக உள்ள நடிகர் தளபதி விஜய் இன்று 22-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜன நாயகன் படக்குழு தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… நெல்சன் திலீப்குமாரின் பர்த்டே ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட ஜெயிலர் 2 படக்குழு!

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Nooru Saami: ஆணுக்கு பெண் வாழ்க்கை கொடுத்தால் தவறா? நூறு சாமி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் – அப்படி என்ன இருக்கு!

Follow Us