நெல்சன் திலீப்குமாரின் பர்த்டே ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட ஜெயிலர் 2 படக்குழு!
Director Nelson Dilipkumars 42nd Birthday : கோலிவுட் சினிமாவில் இயக்குநராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நெல்சன் திலீப்குமார். இவர் இன்று (21/06/2026) தனது 42வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் அதற்கான ஸ்பெஷல் வீடியோவை ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழில் நயன்தாராவின் (Nayanthara) நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா (Kolamaavu Kokila) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக சினிமாவில் நுழைந்தவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar). இவரின் இயக்கத்தில் இதுவரை கிட்டத்தட்ட 4 படங்கள் வெளியாகியுள்ளதது. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் முதல்வர் விஜய் (CM Vijay) வரை பல்வேறு உச்ச பிரபலங்களுடன் படங்களில் பணியாற்றியுள்ளார். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியாகியிருந்த படம்தான் ஜெயிலர் 1 (Jailer 1). கடந்த 2023ம் ஆண்டில் வெளியான இப்படமானது அவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்து, சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக இவர் தற்போது ஜெயிலர் 2 (Jailer 2) படத்தை இயக்கும் பணிகளில் தீவிரமாக இருந்துவருகிறார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் வரை நடிகர்கள் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.
இந்நிலையில் இன்று 2026ம் ஆண்டு ஜூன் 21ம் தேதியில் தனது 42வது பிறந்தநாளை நெல்சன் திலீப்குமார் கொண்டாடிவருகிறார். இந்நிலையில், அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜெயிலர் 2 படக்குழு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க: தனுஷ் – மாரி செல்வராஜ் படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்
ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட நெல்சன் திலீப்குமார் பர்த்டே ஸ்பெஷல் வீடியோ பதிவு:
Happy Birthday to the blockbuster director who continues to entertain us with his unique filmmaking style and unconventional storytelling! @Nelsondilpkumar #HappyBirthdayNelson #HBDNelson pic.twitter.com/iJDR7cGeFi
— Sun Pictures (@sunpictures) June 21, 2026
இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் தமிழில் இதுவரை 4 படங்களே வெளியாகியுள்ளது. நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனுடன் டாக்டர், தளபதி விஜயுடன் பீஸ்ட் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜெயிலர் 1 என மொத்தம் நான்கு படங்கள் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியாக ஜெயிலர் 2 படமானது, நெல்சனின் 5வது படமாக தயாராகிவருகிறது. இதை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைத்துவருகிறார். இப்படமானது மிக பிரம்மாண்டமான நடிகர்களை கொண்டு உருவாக்கப்பட்டுவரும் நிலையில், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.
இதையும் படிங்க: லவ் டுடே பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தே சிம்பு கணிச்சிட்டாரு – பிரதீப் ரங்கநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
ஜெயிலர் 2 படத்தை முடித்த கையேடு நெல்சன் திலீப்குமார், கோலிவுட் சினிமாவே எதிர்பார்க்கும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது. தற்போது ஜெயிலர் 2 படத்தின் சில காட்சிகளுக்கான ஷூட்டிங் ஒருபும் நடக்க, KHxRK படத்திற்கான பணிகளும் ஒருபுறம் நடைபெறுகிறதாம். இதன் ஷூட்டிங் வரும் 2027ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.