AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jailer 2: மீண்டும் படப்பிடிப்பை நோக்கி ஜெயிலர் 2 திரைப்படம்.. காரணம் என்னனு தெரியுமா?

Rajinikanths Jailer 2 Reshoot: நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவந்த திரைப்படம்தான் ஜெயிலர் 2. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சில காரணங்களால் மீண்டும் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Jailer 2: மீண்டும் படப்பிடிப்பை நோக்கி ஜெயிலர் 2 திரைப்படம்.. காரணம் என்னனு தெரியுமா?
ஜெயிலர் 2 திரைப்பட மறு படப்பிடிப்புImage Source: social media
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Jun 2026 16:48 PM IST

பான் இந்தியவரை புகழ்பெற்ற நடிகராக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 171 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் 172வது திரைப்படமாக தயாராகிவந்ததுதான் ஜெயிலர் 2 (Jailer 2). இப்படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய நிலையில், இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றுவந்தது. மேலும் கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தின் தொடக்கத்தில், இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்ததாகவும், படக்குழு கேக் வெட்டி கொண்டாடியிருந்தது.

இதற்கு பிறகும் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு மாதத்திற்கு ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கிட்டத்தட்ட ஒரு ஒரு வருடத்திற்கும் மேல் இப்படத்தின் ஷூட்டிங் நடந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கவுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: இருமுகன் இயக்குநரின் கூட்டணியில் விக்ரம்.. சியான்63 பட ஷூட்டிங் இன்று தொடக்கம்!

மீண்டும் ஷூட்டிங்கை நோக்கி ஜெயிலர் 2 படக்குழு:

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்ததாக கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தின் தொடக்கத்திலே படக்குழு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்கிய நிலையில், படத்தின் முதல் பதிப்பைப் பார்த்த பிறகு இயக்குநர் நெல்சனுக்கு முழு திருப்தி ஏற்படவில்லையாம்.

இதையும் படிங்க: தனுஷின் மருமகனுடன் இணைந்து நடிக்கும் குஷ்புவின் மகள்.. வைரலாகும் புரோமோ வீடியோ!

படத்தின் வெளியீட்டை மேலும் மெருகேற்றி மேம்படுத்துவதற்காக, நெல்சன் தற்போது கூடுதலாக 25 நாட்கள் மறுபடப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. மேலும் இதில் பிரபலம் ஒருவரை பற்றி தாக்கி பேசியதாகவும், அவர் தற்போது அரசியலில் இருக்கும் நிலையில், அந்த காட்சிகளை நீக்கவதற்காகவும் இந்த மறு படப்பிடிப்பு நடப்பதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

ஜெயிலர் 2 படத்தின் ரீ-ஷூட்டிங் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

ஜெயிலர் 2 படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் இன்னும் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையதாக நிலையில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்கு ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us