AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நோ ஷாருக்கான்… நோ ஹ்ரித்திக் ரோஷன்… கேமியோவில் புது முடிவு எடுத்த ஜெயிலர் 2 படக்குழு!

Jailer 2 Movie Cameo Entirely Cancelled | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள ஜெயிலர் 2 படம் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணைத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அது என்ன என்று தற்போது பார்க்கலாம்.

நோ ஷாருக்கான்… நோ ஹ்ரித்திக் ரோஷன்… கேமியோவில் புது முடிவு எடுத்த ஜெயிலர் 2 படக்குழு!
ஜெயிலர் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jun 2026 20:24 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் தொடர்ந்து மாஸ் காட்டி வருகின்றது. தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம ஆனார் நெல்சன் திலீப் குமார். டார்க் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி உள்ளார். அதன்படி நெல்சன் திலீப் குமார் தமிழ் சினிமாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், தளபதி விஜய் மற்றும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களை இயக்கி உள்ளார்.

அதன்படி இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர். நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. அதன்படி அந்த ஜெயிலர் 2 படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

கேமியோவில் புது முடிவு எடுத்த ஜெயிலர் 2 படக்குழு:

ஷாருக் கான் அல்லது ஹிருத்திக் ரோஷன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த கூடுதல் சிறப்புத் தோற்றக் காட்சி இப்போது முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளது. பார்வையாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலான ஒரு தொடர்ச்சியை வழங்க இயக்குநர் நெல்சன் விரும்புவதால், கூடுதல் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஊட்டி விடுமுறைக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனான கூடுதல் படப்பிடிப்பு ஜூன் 8 அல்லது 9-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தொடங்கியது நாக சைத்தன்யாவின் சூப்பர் ஹிட் தூதா சீரிஸின் 2-ம் பாகம் ஷூட்டிங்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Slum Dog Movie: விஜய் சேதுபதியின் ஸ்லம்டாக் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? – அப்டேட் இதோ!

Follow Us