விஜய் சேதுபதி குறித்து புகழ்ந்து பேசிய நெல்சன் திலீப் குமார் – வைரலாகும் வீடியோ
Director Nelson Dilipkumar: இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நெல்சன் விஜய் சேதுபதி குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சின்னதிரையில் பல நிகழ்ச்சிகளையும் விருது விழாக்களையும் இயக்கி வந்தார் இயக்குநர் நெல்சன் திலீப் குமார். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் நெல்சன் திலீப் குமார். இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா முன்னணி வேடத்தில் நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர் யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். டார்க் காமெடி பாணியில் வெளியாகி இருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் டாக்டர் படத்தை இயக்கினார்.
இந்த டாக்டர் படமும் டார்க் காமெடி பாணியில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பு மிகவும் வித்யாசமாக இருந்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. காமெடியை மையமாக வைத்து பலப் படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் இந்த படம் முழுவதும் சிரிக்காமலே நடித்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஆழ்த்தியது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து மூன்றாவது படத்திலேயே இயக்குநர் நெல்சன் திலீப் குமார் நடிகர் விஜயுடன் கூட்டணி வைத்தார். இந்த கூட்டணியில் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.




விஜய் சேதுபதியுடன் வேலை செய்ய வேண்டும் என்று ஆசை:
இந்த நிலையில் இறுதியாக நெல்சன் திலீப் குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் விழா ஒன்றில் பேசிய போது எனக்கு விஜய் சேதுபதி சாரை மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு படத்தை நான் இயக்கும் போதும் அவரை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பேன். அதே மாதிரி அனிருத்தும் பல முறை என்னிடம் நீ கண்டிப்பாக விஜய் சேதுபதியுடன் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அது விரைவில் நடக்கும் என்றும் நெல்சன் திலீப்குமார் அந்த விழாவில் பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்தது பராசக்தி படத்தின் ரத்னமாலா பாடல்!
இணையத்தில் கவனம் பெறும் நெல்சனின் பேச்சு:
#Nelson Recent
– I like #VijaySethupathi sir so much. In each of my films, I try to work with him.
– #Anirudh also said, “Nelson, you should do a film with #VJS.”
– It will happen soon.#Jailer2 #Thalaivar173pic.twitter.com/YXwkpjIYxc— Movie Tamil (@_MovieTamil) November 27, 2025
Also Read… தனது ரேஸ் காருடன் அஜித் குமார் கொடுத்த மாஸான போஸ்… இணையத்தில் வைரலாகும் போட்டோ