உனக்கென மட்டும் வாழும் இதயமடி… 14 ஆண்டுகளை நிறைவு செய்தது மயக்கம் என்ன படம்
14 Years Of Mayakkam Enna Movie: நடிகர் தனுஷ் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மயக்கம் என்ன. இந்த நிலையில் இந்த மயக்கம் என்ன படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக இயக்குநர்கள் செல்வராகவன் மற்றும் வெற்றிமாறன் இடன் நடிகர் தனுஷ் இணைந்து பணியாற்றும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் மயக்கம் என்ன. இந்தப் படம் கடந்த 25-ம் தேதி நவம்பர் மாதம் 2011-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் ரிச்சா கங்கோபாத்யாய், சுந்தர் ராமு, மதிவாணன் ராஜேந்திரன், பூஜா தேவரியா, ஜாரா பாரிங், ரவிபிரகாஷ், ஷில்பி கிரண், ராஜீவ் சௌத்ரி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஓம் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் தினேஷ்குமார், ஈஸ்வரமூர்த்தி, மனோகர் பிரசாத், ரவிசங்கர் பிரசாத், செல்வராகவன் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
14 ஆண்டுகளை நிறைவு செய்தது மயக்கம் என்ன படம்:
வைல்ட்லைஃப் போட்டோகிராஃபியில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார் தனுஷ். அம்மா அப்பா இல்லாமல் இருக்கும் இவருக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒரே ஒரு தங்கை மட்டுமே உள்ளார். இவருக்கு சிறு வயதில் இருந்தே இவரது நண்பர்கள் தான் அனைத்தையும் செய்கிறார்கள். இந்த நிலையில் தனுஷின் நண்பரான சுந்தர் ராமு ஒருதலையாக காதலிப்பவர் ரிச்சா.




Also Read… பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபல நடிகை… இணையத்தில் வைரலாகும் வீடியோ
இவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சுந்தர் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் ரிச்சாவிற்கு தனுஷ் மீது காதல் ஏற்படுகின்றது. ரிச்சா மீது தனுஷிற்கும் காதல் ஏற்பட அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இதனைத் தொடர்ந்து தனுஷின் போட்டோகிராஃபி பேஷனுக்காக ரிச்சா எப்படி எல்லாம் உதவியாக இருக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் வெளியான போது ரிச்சாவின் கதாப்பாத்திர பெயரான யாமினி என்பதை குறிப்பிட்டு யாமினி மாதிரி ஒரு மனைவி வேண்டும் என்று கூறும் அளவிற்கு இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… நிறைவடைந்தது கருப்பு படத்தின் ஷூட்டிங்… ரிலீஸ் எப்போது தெரியுமா?