Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட 2வது பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Love Insurance Kompany 2nd Single : தமிழ் சினிமாவில் தனது முதல்படத்திலே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் 2வது படமாக உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டதுதான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம். இந்த படமானது வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், 2வது பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட 2வது பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?
லவ் இன்சூரன்ஸ் கம்பெனிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 Nov 2025 17:31 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் விக்னேஷ் சிவன் (Vignesh ShivaN). இவர் நடிகை நயன்தாராவின் (Nayanthara) கணவர் ஆவார். இவரும் சினிமாவில் தொடந்து திரைப்படங்களை இயக்கிவரும் நிலையில், நயன்தாராவின் தயாரிப்பில் இவர் இயக்கியுள்ள படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan)கதாநாயகனாக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படத்தை தொடர்ந்து 2வது ஒப்பந்தமான திரைப்படம் இது ஆகும். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி இப்படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா (SJ. Suryah) நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படமானது எதிர்காலத்தில் நடக்கும் ஓர் காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடலான “தீமா தீமா” என்ற பாடல் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது 2வது பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் 2வது பாடலான “பட்டுமா” (Pattuma) லிரிக்கல் பாடல் வரும் 2025 நவம்பர் 27ம் தேதியில் மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் தி இயர் 2025 விருதை வென்றார் நடிகர் அஜித்குமார்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் 2வது பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை :

இந்த படமானது முதலில் கடந்த 2025 செப்டம்பர் 18ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. பின் அந்த படத்தின் எடிட்டிங் மற்றும் VFX பணிகள் நிறைவடையாமல் போக ரிலீஸ் தேதியில் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்திருந்தது. இதே நாளில் டியூட் படமும் வெளியாகியிருந்த நிலையில், வசூல் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் மீண்டும் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியிருந்தது. அதன்பின் 3வது முறையாக வெளியிட்ட அறிவிப்பில் 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகும் என அறிவித்திருந்தது.

இதையும் படிங்க: மீண்டும் ஆக்ஷன் நாயகனாக ஹரிஷ் கல்யாண்… HK15 படத்தின் டைட்டில் டீசர் இதோ!

இந்நிலையில் இந்த ரிலீஸ் தேதியும் மாற்றப்படவுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் பரவிவந்தது. அதன் காரணமாக மீண்டும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிசெய்யும் விதத்தில் 2வது பாடல் ரிலீஸ் அறிவிப்பில் படக்குழு ரிலீஸ் தேதியை உறுதிச் செய்துள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் 3வதாக வெளியாகும் படமாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி அமைந்துள்ளது.