Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thalaivar173: யாரும் எதிர்பார்க்காத காம்போ.. ரஜினிகாந்த்தின் தலைவர்173 படத்தை இயக்குபவர் இவரா?

Thalaivar 173 Update: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பு மற்றும் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகவுள்ள படம்தான் தலைவர்173. இப்படத்தை சுந்தர் சி இயக்கவிருந்த நிலையில், பின் அவர் இதிலிருந்து விலகிவிட்டார். பின், இந்த படத்தை யார் இயக்கப்போவது என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

Thalaivar173: யாரும் எதிர்பார்க்காத காம்போ.. ரஜினிகாந்த்தின் தலைவர்173 படத்தை இயக்குபவர் இவரா?
தலைவர்173 பட அப்டேட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 Nov 2025 16:09 PM IST

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் சினிமாவில் இணைந்து இந்த 2025ம் ஆண்டுடன் சுமார் 50 வருடத்தை நிறைவு செய்திருந்தார். இவரின் 50வது வருடத்தை கொண்டாடும் விதத்தில், சமீபத்தில் தனியார் பத்திரிக்கை ஒன்று இவரை சிறப்பித்திருந்தது. அந்த வகையில் தென்னிந்திய முழுக்க பிரபலமான நாயகனாக ரஜினிகாந்த் இருந்துவருகிறார். இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் 2 (Jailer 2) திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருந்துவரும் நிலையில், இதைஅடுத்ததாக எந்த படத்தில் இணைகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்துவந்தனர். இதை அடுத்ததாக கமல்ஹாசனின் (Kamal Haasan) தயாரிப்பில் சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில் தலைவர் 173 (Thalaivar173) படம் உருவாகுவதாக கூறப்பட்டது. பின் சில காரணங்களால சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகினார். பின் யார் இந்த படத்தை இயக்கப்போகிறார்? என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இணையத்தில் தகவல் ஒன்று வைரலாகிவருகிறது.

என்னவென்றால் இந்த படத்தை ஹரிஷ் கல்யாணின் பார்கிங் (Parking) படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. ரஜினிகாந்திடம் தலைவர்173 படத்தின் கதையை இவர் கூறியதாகவும் அது ரஜினிகாந்த்திற்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கெஸ்ட் இல்ல எவிக்ஷனுக்கு வந்தேன்.. அடுத்தடுத்த அதிர்ச்சியை கொடுத்த கவின்.. இந்த வாரத்தில் வெளியேறும் போட்டியாளர் யார்?

தேசிய விருது வாங்கிய இயக்குநருடன் தலைவர்173 படத்தில் இணையும் ரஜினிகாந்த் :

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம்தான் தலைவர்173. இப்படத்திற்காக இயக்குநர்கள் தேடல் நடந்துவரும் நிலையில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினிகாந்த்தை அணுகியதாக கூறப்படுகிறது. பின் அவரிடம் வித்தியாசமான கதைக்களம் குறித்து தெரிவித்ததாகவும், அந்த கதை ரஜினிகாந்திற்கு மிகவும் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜனின் பட டைட்டிலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. டைட்டில் என்ன தெரியுமா?

இந்நிலையில் இவர் இந்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்தைகள் நடந்துவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது உண்மையானால் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் வெளியிட்ட லேட்டஸ்ட் எக்ஸ் பதிவு :

இவர் சிலம்பரசனின் STR49 படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டநிலையில், இந்த படம் தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்னை காரணமாக இன்னும் தொடங்காமல் இருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் எல்லாம் நடந்த நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டி தொடங்கும் என்பது பற்றி நடிகை கயாடு லோஹர் தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கு முன் ரஜினிகாந்துடன் ராம்குமார் பாலகிருஷ்ணன் இணைவார் என கூறப்படுகிறது.