Peddi Movie: ஏ.ஆர்.ரஹ்மானின் குரலில்.. ராம் சரணின் பெடி பட ‘ரை ரை ரா ரா பாடல்’ வெளியீடு!
Rai Rai Raa Raa Song: நடிகர் ராம் சரண் மற்றும் இயக்குநர் புச்சி பாபு சனாவின் கூட்டணியில் தயாராகிவரும் படம்தான் பெடி. இப்படத்திற்கு எஸ்.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், இதன் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் 2வது வெளியாகியுள்ளது.
தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ராம் சரண் (Ram Charan). இவர் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக இருந்துவரும் நிலையில், தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக தமிழ் இயக்குநர் எஸ் சங்கர் (S Shankar) இயக்கத்தில், கேம் சேஞ்சர் (Game Changer) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கத்தில் இவர் நடித்துவந்த புது படம்தான் பெடி (Peddi). இப்படமானது ஆரம்பத்தில் RC16 என அழைக்கப்பட்டுவந்தது. இதில் ராம் சரண் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடித்துள்ளார்.
இவர்கள் இருவரின் ஜோடி இப்படத்தின் மூலமாக முதல் முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் நிலையில், ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியிருந்தது. தற்போது 2வது பாடல் “ரை ரை ரா ரா” என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? – படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பெடி திரைப்படத்தின் 2வது பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
When grit finds its voice 🔥
When grace finds its moves 🤩#Peddi Second Single #RaiRaiRaaRaa (Telugu) Out Now❤️🔥▶️https://t.co/yrdKeTtKJ9#PEDDI WORLDWIDE RELEASE ON 30th APRIL, 2026 pic.twitter.com/dHIWPRp8hR
— PEDDI (@PeddiMovieOffl) March 2, 2026
பெடி திரைப்படத்துடன் மோதும் படம்:
இந்த் பெடி திரைப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக காத்திருக்கிறது. இப்படமானது கிரிக்கெட் விளையாட்டு மற்றும் கடத்தல் போன்ற அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகிவருகியுள்ளது. இதில் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூருடன் நடிகர்கள் ஜெகபதி பாபு, தேவேந்து, சிவராஜ்குமார்,சத்யா, விஜி சந்திரசேகர் மற்றும் பொம்மன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: 25 நாட்களைக் கடந்த வித் லைவ் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு
இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸின்போதுதான் தமிழில் நடிகர் தனுஷின் கர என்ற படமும் வெளியாகவுள்ளது. இதை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதுவும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே தேதியில் வெளியாகும் நிலையில், கோலிவுட் மற்றும் டோலிவுட் மோதலாக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.