Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி.. மக்களை எச்சரித்த படக்குழு!

Rajkamal Films Warns: தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்துவருபவர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளாராகவும் படங்களை உருவாக்கிவருகிறார். அந்த வகையில் இவரின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி , வாய்ப்பு கொடுப்பதாக ஏமாற்றங்கள் நிகழ்ந்துவருவதாக படக்குழு எச்சரித்துள்ளது.

கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி.. மக்களை எச்சரித்த படக்குழு!
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Nov 2025 21:24 PM IST

நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பிலும் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இவர் அரசியல் மற்றும் திரைப்பட தயாரிப்பு போன்ற பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறார். அந்த வகையில் இவரது தயாரிப்பு நிறுவனம் தான் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (Rajkamal Films International). இந்த நிறுவனத்தின் கீழ் இதுவரை பல படங்ககள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இறுதியாக தக் லைஃப் (Thug Life) படமானது வெளியானது. ஆனால இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. அந்த வகையில் கமல்ஹாசன் மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரித்த வருகிறார். இந்நிலையில் இந்த நிறுவனத்தின் பெயரில் மோசடிகள் நடப்பதாக படக்குழு எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடிகள் நடைபெறும் நிலையில் அதை எச்சரித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜனின் பட டைட்டிலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. டைட்டில் என்ன தெரியுமா?

மக்களை எச்சரித்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவு

அந்த பதிவில்,” ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் படங்களுக்கு, எந்தவித ஏஜெண்டுகள் மூலமும் நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும். எங்ககளின் தயாரிப்பில் கீழ் உருவாகும் படத்தில் வாய்ப்புகள் வாங்கி தருவதாக எந்தவித தகவலும் வந்தால் அதை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பைசன் முதல் டீசல் வரை… இந்த வீக்கெண்ட் ஓடிடியில் என்ன பார்க்கப் போறீங்க?

மேலும் இதுபோன்ற ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடி செய்பவர்களுக்கு, சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இப்படக்குழு எச்சரித்துள்ளது.

சர்வதேச திரைப்பட விழாவில் அமரன் படக்குழு கலந்துகொண்டது தொடர்பான பதிவு:

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் கடந்த 2024ம் ஆனதில் வெளியான படம் அமரன். சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். இந்த படமானது கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியான நிலையில் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்திற்கு சர்வதேச திரைப்படவிழாவில் சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படக்குழு இன்று 2025 நவம்பர் 21ம் தேதியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.